டாப் கியரில் ஏழரை.. நம்பர் நடிகையின் சாபம் சும்மா விடுமா.. பரிகாரம் பண்ண ரெடியான நடிகர்?
சென்னை: இரட்டை குழந்தைகளுக்கு கணவர் தந்தையான நிலையில், அவருக்கு கிடைக்கவிருந்த பெரிய பட வாய்ப்பை அந்த டாப் நடிகர் தட்டிப் பறித்து விட்டாரே என நம்பர் நடிகை விட்ட சாபம் தான் அந்த படத்தை ஆரம்பிக்கவே முடியாமல் இழுத்தடித்துக் கொண்டே செல்வதாக சமீபத்தில் டாப் நடிகருக்கு சில ஜோசியர்கள் அறிவுறை வழங்கியதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், அந்த உக்கிரம் குறையும் வரை படத்தை ஆரம்பிப்பது நல்லது இல்லை என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மனம் குளிருமாறு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் பரிகாரம் சொல்லியிருப்பதாக பரபரப்பு பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் அலையடித்து வருகின்றன.

அதன் காரணமாகத்தான் நடிகர் தொடர்ந்து அந்த படத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
டாப் கியரில் ஏழரை: சினிமாவில் போட்டி நடிகரை பொளந்துக் கட்டியே தீர வேண்டும் என வெறித்தனமாக களமிறங்கிய டாப் நடிகருக்கு திடீரென டாப் கியரில் ஏழரை பிடித்துக் கொள்ள அறிவிக்கப்பட்ட படத்தையே ஆரம்பிக்காமல் காலத்தை கடத்தி வருகிறார் என பெரும் விவாதங்கள் கிளம்பி உள்ளன.
மேலும், அதன் உச்சமாக நடிகரின் படத்தையே அந்த தயாரிப்பு நிறுவனம் கைவிடும் நிலைமைக்கே நிலைமை மோசமாகி விட்டதாக கூறுகின்றனர்.
நம்பர் நடிகையின் சாபம்: இதற்கு காரணமே, எந்த நடிகையால் தனக்கு வெற்றி கிடைத்தது மற்றும் இத்தனை பெரிய சம்பளத்துக்கு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் படம் கிடைத்ததோ, அந்த நடிகைக்கே துரோகம் விளைவிக்கும் விதமாக ஒரு வாய்ப்புக் கூட தராமல் நடிகர் அலைகழித்த நிலையில், தன் கணவருக்கு ஏற்பட்ட அசிங்கம் காரணமாக கண்ணகி போல நம்பர் நடிகை விட்ட சாபத்தால் தான் டாப் நடிகருக்கு இந்த நிலைமை என கோடம்பாக்கத்தில் பலரும் பேசிக் கொள்கின்றனர்.
இதிலிருந்து வெளிவர என்ன செய்வது என சமீபத்தில், ஜோசியர்களிடம் டாப் நடிகரின் மனைவியே ஆலோசனை நடத்திய நிலையில், உக்கிரம் குறைய இப்போதைக்கு படத்தை தள்ளிப் போட வேண்டும் என்றும் சொன்னதாகவும், எதிராளியின் கோபத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சொன்னதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இயக்குநரை சந்தித்த டாப் நடிகர்: அதன் காரணமாகவே சமீபத்தில், வேண்டாம் என விரட்டி அடித்த அந்த இயக்குநரையும் நடிகர் சந்தித்து, விரைவில் சேர்ந்து படம் பண்ணலாம் என்று பேசி, இயக்குநரையும் நம்பர் நடிகையையும் ஹேப்பி ஆக்கி உள்ளார் என்றும் கூடிய சீக்கிரமே நடிகரின் பிரச்சனைகள் தீர்ந்து வெற்றிக் கொடி ஏற்றுவார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











