நான் சொன்னது ஒண்ணு.. அவன் செஞ்சது ஒண்ணு.. இவ்ளோ போராவா எடுப்பான்.. இயக்குநரை பங்கம் பண்ண டாப் ஹீரோ?

By Staff

சென்னை: டாப் நடிகர் சொன்னதை கேட்டுத்தான் படம் எடுத்தேன் என ஒவ்வொரு பேட்டியிலும் தன்னை காப்பாற்றிக்கொள்ள என்னவெல்லாம் கதை விட முடியுமோ அந்தளவுக்கு கதை விட்டுக் கொண்டிருக்கிறார் அந்த ஹேப்பி இயக்குநர். ஆனால், இயக்குநர் சமைத்துக் கொடுத்த படம் அந்த டாப் ஹீரோவுக்கே சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் படத்தின் அவுட்புட் இப்படி வரும் என்பதை அவர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என தனது அடுத்த படத்தின் இயக்குநர் குழுவுடன் பேசும் போது கூறியுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

மாஸ் நடிகர் ஒரு ஆங்கில படத்தை எடுத்து இயக்கச் சொல்லும் போது அந்த இயக்குநர் அந்த படத்தை எப்படி எல்லாம் ரசிகர்களை கவரும் வகையில் எடுக்க முடியும் என்பதை அலசி ஆராய்ந்து படத்தை இயக்கி ஹிட் அடித்திருப்பார்.

gossip kollywood actors gossip

அதே மாதிரி ஒரு தரமான சம்பவத்தை இந்த இயக்குநர் செய்வார் என எதிர்பார்த்தது என் தவறுதான் என்றும் எனக்கே படம் பார்க்கும் போது பல இடங்கள் போரடித்தால் ஆடியன்ஸ் எப்படி படத்தை ஹிட் ஆக்குவாங்க சொல்லுங்க என பேசியுள்ளாராம்.

எஸ்கேப்பான இயக்குநர்: தன்னுடைய படத்தை ரசிகர்கள் குறை சொல்கிறார்கள் என்றால் அதில் உள்ள பிழைகளை சரி செய்ய முயலாமல் அதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை மட்டுமே அந்த ஹேப்பி இயக்குநர் யோசித்துக் கொண்டும் பேசியும் வருகிறாராம். ஆனால், டாப் நடிகருக்கே இயக்குநரின் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை எனக் கூறுகின்றனர்.

சொன்னது ஒண்ணு செஞ்சது ஒண்ணு: இந்த கதையை அந்த இயக்குநரிடம் பண்ண ஆசைப்படுகிறேன் என்றும் இந்த படத்தை ரசிகர்களுக்கு பிடிக்கும் அளவுக்கு கொடுக்க முடியுமா? என கேட்டபோது, சூப்பர் கதை சார், செமையா கனெக்ட் ஆகும். நான் நல்லா பண்ணித்தருகிறேன் கன்ஃபார்ம் பிளாக்பஸ்டர் என்றெல்லாம் கதைவிட்டு எக்கச்சக்கமாக பட்ஜெட்டை செலவு செய்து கடைசியில் நான் கரெக்‌ஷன் பண்ண ஒரு சில காட்சிகளை தவிர்த்து படம் பெரிதாக ரசிகர்களை கனெக்ட் செய்யாதது தான் சொதப்பியதற்கு காரணம் என இயக்குநர் மீதான தன்னுடைய வருத்தத்தை டாப் நடிகர் கொட்டித் தீர்த்துள்ளாராம்.

மிஸ்ஸே ஆகாது: மேலும், டாப் நடிகர் மனசுக்கு பிடித்த படியும் அவர்களது ரசிகர்களை கடைசி காட்சி வரை கொண்டாட வைக்கும் அளவுக்கும் அடுத்த படத்தை இயக்குநர் உருவாக்கி வருவதை அறிந்துக் கொண்ட நடிகர் அந்த இயக்குநரை பாராட்டியுள்ளதாகவும் கூறுகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து சொதப்பி வரும் ஹேப்பி இயக்குநருக்கு இப்போதைக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைப்பது அரிது என கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X