Don't Miss!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
இதென்ன பிரமாதம்.. அடுத்த படத்துக்கு பான் இந்தியா புரமோஷனே பண்ணப் போறாராம் அந்த டாப் நடிகர்!
சென்னை: விளம்பரம் புடிக்காது, சோஷியல் மீடியாவில் இல்லை, ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க மாட்டேன், சொந்த படத்துக்கே புரமோஷன் செய்ய மாட்டேன் என அடம் பிடித்து வந்த அந்த டாப் நடிகரின் மனநிலை தற்போது நிறையவே மாறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தான் வெளியே வந்தாலே பெரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலருக்கும் இடையூறாக மாறிவிடுகிறதே என்கிற நல்ல எண்ணத்தாலே இதுவரை பல நிகழ்ச்சிகளை டாப் நட்கர் தவிர்த்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
சில நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட பிரச்சனையும் அவரை மனதளவில் பாதித்த நிலையில், அப்படியொரு முடிவை அவர் எடுத்திருந்தார்.

தோல்விக்கு காரணமே
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி மற்றும் வசூல் செய்யாமல் போனதுக்கு காரணமே நடிகர் புரமோஷனுக்கு வராதது தான் என்கின்றனர். சமீப காலமாக பெரிய நடிகர்களும், இயக்குநர்களும் தங்கள் படங்களை அண்டை மாநிலங்களில் உள்ள ரசிகர்களும் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்க பறந்து பறந்து புரமோஷன் செய்து வருகின்றனர்.

நடிக்க மட்டுமே செய்வேன்
ஆனால், டாப் நடிகர் அப்படியெல்லாம் அதிகமாக செய்தது இல்லை. தொடர் தோல்விக்கு பிறகு ஒரு சில படங்களுக்கு மட்டுமே புரமோஷனுக்கு வந்துள்ளார். ஆனால், அதன் பிறகு கணிசமான லாபத்தை தனது படங்கள் பெற்று வருகிறது என்பதை அறிந்து கொண்ட அவர், எந்தவொரு புரமோஷன் நிகழ்ச்சிக்கும் செல்லாமல் தவிர்த்து வந்தார்.

காலம் மாறிடுச்சு
ஆனால், இன்றைய நிலைமையே தலைகீழாக மாறி விட்டதை சமீப காலமாக நடைபெற்ற நிகழ்வுகளை பார்த்து ரொம்பவே கவனத்துடன் நோட் செய்திருக்கிறாராம் அந்த டாப் நடிகர். தான் இன்னமும் அப்படியே இல்லாமல், காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நினைப்பு காரணமாகவே சமீப காலமாக ரசிகர்களுக்காக பல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார். இது புரமோஷன் என நினைத்துக் கொண்டாலும், பரவாயில்லை. இனி அதை செய்யத்தான் போகிறேன் என்கிற முடிவில் உறுதியாக உள்ளாராம்.

அந்த பயம்
தன்னுடைய பிடிவாதத்தால், தன்னைச் சார்ந்தவர்கள் சந்தோஷமாகவே இல்லையே என்பதை புரிந்து கொண்டது மட்டுமின்றி, தொடர்ந்து தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும், மற்றும் இந்தியளவில் பல்வேறு மாநிலங்களில் ரசிகர் வட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கமும் தற்போது அவருக்கு வந்து விட்டதாம். சமீப காலமாக ஏற்பட்ட மாற்றங்கள் தான் அப்படியொரு பயத்தையே நடிகருக்கு கொடுத்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

புரமோஷன் பண்ண ரெடி
இதுமட்டுமின்றி, அடுத்து ரிலீசாக உள்ள தனது படத்திற்கு பான் இந்தியா அளவிற்கு புரமோஷன் செய்யவும் ஓகே சொல்லி விட்டாராம். இந்த முறை மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தவும் மற்ற மாநிலங்களில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கவும் இந்த ஸ்டெப் ரொம்பவே தேவையான ஒன்று என்பதை தயாரிப்பாளரும் இயக்குநரும் சொல்லாமலே நடிகரே புரிந்து கொண்டு இருவரிடமும் சொன்னதும் ஒட்டுமொத்த படக்குழுவே இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.