மேக்கப்மேனுக்கு ஒரு நியாயம்... இவருக்கு ஒரு நியாயமா?
தமிழ் சினிமாவில் தன் கையால் தானே சாப்பிட்டார், தன் கையால் தன் தலையை சீவிக்கொண்டார் என்று நேர்மை ப்ளஸ் எளிமை ப்ளஸ் மனிதநேயத்துக்கான மகத்துவமான மனிதராக ஒரு நடிகருக்கு பில்டப் தரப்படுகிறது.
அப்படி சமீபத்தில் ஒரு செய்தியை கசிய வைத்தார்கள். அதாவது நடிகர் கடைசியாக நடித்து வெளியான படத்துக்கு அவரது மேக்கப்மேன் அதிகமான சம்பளம் வாங்கி விட்டாராம். இது தெரிய வந்ததால் மேக்கப்மேனை நடிகர் நீக்கிவிட்டார் என்று செய்தி கசிந்தது.
நடிகரோ கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார். ஆனால் புரமோஷனுக்கு கூட வருவதில்லை என்ற முணுமுணு உள்ளது. தன்னுடைய மார்க்கெட் ரேட்டுக்கு தகுந்தபடி வாங்காமல் பல மடங்கு சம்பளம் வாங்குவது நியாயமா? தோல்வி அடைந்த படம் எதற்காகவாவது தான் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்திருக்கிறாரா? அப்படி என்றால் இவருக்கு ஒரு நியாயம்? சில லட்சங்கள் எக்ஸ்ட்ரா வாங்கிய மேக்கப்மேனுக்கு ஒரு நியாயமா? என்று கோலிவுட்டில் குரல்கள் எழுகின்றன.
இதெல்லாம் நடிகர் காதுக்கே போய் சேராது. அப்படியே சேர்ந்தாலும் ஒரு பயனுமில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.


Click it and Unblock the Notifications









