Don't Miss!
- News
கனமழை எச்சரிக்கை.. திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. வருவாய் அலுவலர் அறிவிப்பு!
- Lifestyle
ஆண்களே! உங்க திருமண உறவை மகிழ்ச்சியாக வைத்திருக்க... நீங்க இந்த விஷயம் பண்ணா போதுமாம்...!
- Finance
பைஜூவில் 15% ஊழியர்கள் பணி நீக்கம்.. ஏன் தெரியுமா.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
- Automobiles
முன்ன மாதிரியில்ல ஹோண்டா வாகனங்கள் மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்... கிடுகிடுவென சரியும் விற்பனை!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாஸ் நடிகரின் படம் ஓடாமல் போனதுக்கு டாப் நடிகர் தான் காரணமா? மேனேஜர் மூலம் பார்க்கப்பட்ட வேலை!
சென்னை: தனது படம் தடுமாறியதும் தனக்கு போட்டியாக இருக்கும் நடிகரின் படம் ஓடவே கூடாது என டாப் நடிகர் செய்த வேலை தான் மாஸ் நடிகரின் படம் இந்த அளவுக்கு தோல்வியை தழுவ காரணம் என்கின்றனர்.
இதுவரை இருவரும் கதையளவில் பெரியதாக ஆர்வமே காட்டியதில்லை என்றாலும் கமர்ஷியல் ரீதியாக இருவரது படங்கள் ஓடி வந்தன.
ஆனால், சமீபத்தில் வெளியான டாப் நடிகரின் படம் பெரிய தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக வெளியான மாஸ் நடிகர் படம் எப்படி இருந்தாலும் ஓடவிடக் கூடாது என்கிற முடிவை அவர் எடுத்ததாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.
ஷூட்டிங் பாதியிலேயே ஓடிப்போன ஹீரோயின்... பிரசாந்த் படத்தில் நடந்த கலவரம்!

அதன் மீது கவனம்
சோஷியல் மீடியாவில் இல்லை என்றாலும், தொடர்ந்து அதனை பிற அக்கவுண்ட்கள் மூலம் அதிகம் கவனித்து வருகிறாராம் அந்த டாப் நடிகர். சரியான நேரத்தில் தனது புகைப்படங்களை வெளியிட சொல்வதும் அவர் தான் என்கின்றனர். சமீப காலமாக அதிகரித்துள்ள ரசிகர்கள் சண்டைக்கு அவர் செய்த வேலைகள் தான் பெரிய காரணமே என்கிற பேச்சு தற்போது கிளம்பி உள்ளது.

அந்த படம் ஓடக்கூடாது
தன்னுடைய படம் ஓடவில்லை என்றதும், மாஸ் நடிகரின் புதிய படத்தையும் ஓடவிடக் கூடாது என்பதில் ரொம்பவே தீவிரம் காட்டி வந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த நடிகரை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களை தன் பக்கம் இவர் சேர்ப்பதே இல்லையாம். அப்படித்தான் அந்த கோலிவுட் நோலனை பக்கமே சேர்க்கவில்லை என பேசிக் கொள்கின்றனர்.

காசு கொடுத்து
மாஸ் நடிகரின் படம் படுதோல்வியை சந்திக்க காசு கொடுத்து இவர் செட்டப் செய்த சில ஆட்கள் சமூக வலைதளங்களில் கிளப்பி விட்டது தான் காரணம் என்கின்றனர். மேலும், தனது ரசிகர்களுக்கு இன்னொரு பிற மொழி படத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் நடிகர் கூறினார் என திடுக்கிடும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

உண்மை என்ன
ஆனால், இது எதுவுமே அந்த நடிகருக்குத் தெரியாது என்றும் நடிகரின் மேனேஜர் தான் இது போன்ற வேலைகளில் இறங்கி டாப் நடிகருக்கு ஆதரவாகவும் மாஸ் நடிகருக்கு எதிராகவும் பல வேலைகளை பார்த்து வருகிறார் என்றும் பகீர் குற்றச்சாட்டுக்களை கோடம்பாக்க வாசிகள் முன் வைத்து வருகின்றனர். சீக்கிரமே இந்த தகவல்கள் நடிகரின் காதுகளுக்கு எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் அடக்கவில்லை
டாப் நடிகரின் மேனேஜருக்கு இதில் சம்பந்தம் இல்லை என்றால், சமூக வலைதளத்தில் கொழுந்து விட்டு எரியும் ரசிகர் சண்டையை அடக்க அவர் ஏன் உத்தரவிடவில்லை என்கிற கேள்விகளையும் சினிமா வட்டத்தினர் முன் வைத்து வருகின்றனர். மேலும், நடிகருக்கும் இந்த விஷயம் தெரிந்தும் அவரும் அமைதி காத்து வருகிறார் என்றும் பேசிக் கொள்கின்றனர்.