முன்னாள் கணவரின் தாராளம்.. நடிகைக்காக இறங்கி வந்துட்டாராம்.. பழசை மறக்க முடியலயாம்.. கடுப்பில் புது மனைவி
சென்னை: தென்னிந்திய திரையுலகில் விவாகரத்துகளும், மறுமணங்களும் தற்போது சாதாரணமாகிவிட்டாலும், அதற்குப் பின்னால் நடக்கும் சில சம்பவங்கள் தான் கோலிவுட் முதல் டோலிவுட் வரை தற்போதைய ஹாட் டாப்பிக். அந்த வகையில், சமீபத்தில் விவாகரத்து பெற்று, வேறு ஒருவரை மறுமணம் செய்து கொண்ட அந்த டாப் வாரிசு நடிகரின் வீட்டில் இப்போது 'புயல்' வீசத் தொடங்கியிருக்கிறதாம்.
விவாகரத்திற்குப் பிறகும் தனது முன்னாள் மனைவியான அந்த முன்னணி நடிகையின் மீது நடிகருக்கு ஒரு சாஃப்ட் கார்னர் இருந்து கொண்டே இருக்கிறதாம். "பழைய நினைவுகளை இன்னும் அவரால் மறக்க முடியவில்லை" என்று திரையுலக வட்டாரங்களிலேயே முணுமுணுக்கிறார்கள். இந்நிலையில், அந்த நடிகை தற்போது பெரும் பொருட்செலவில் ஒரு படத்தை தயாரித்து, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.
படம் ரிலீஸாகும் இந்தச் சூழலில், வியாபாரம் சரியாக அமையாததால் நடிகை கடும் தவிப்பில் இருந்துள்ளார். இந்தத் தகவல் முன்னாள் கணவரான அந்த வாரிசு நடிகரின் காதுக்குச் சென்றுள்ளது. இதையடுத்து, நடிகை நடித்த திரைப்படம் அந்த நடிகருக்குச் சொந்தமான தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

திரையுலகில் ஓடும் டாக்: "விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் லாபத்தில் பெரிய ஷேர் கேட்கும் இந்தச் சூழலில், முன்னாள் மனைவிக்காக நடிகர் பெரிய அளவில் இறங்கி வந்திருக்கிறார். மற்ற படங்களுக்கு கொடுக்கும் தியேட்டர் ஷேரை விட, இந்த நடிகையின் படத்திற்கு கூடுதலாக ஷேர் (பங்குத்தொகை) கொடுக்க வேண்டும் என்று தனது தியேட்டர் நிர்வாகத்திற்கு நடிகர் கறாராக உத்தரவிட்டுள்ளாராம்."
ஓவர் தாராளம்: தயாரிப்பாளர்கள் ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்குள் செத்துப் பிழைக்கும் இந்த காலகட்டத்தில், முன்னாள் மனைவிக்காக நடிகர் காட்டியுள்ள இந்த தாராள மனப்பான்மை திரையுலகினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், விஷயம் இத்தோடு முடியவில்லை.
புது மனைவியின் கோபம்: முன்னாள் மனைவிக்காக நடிகர் தனது சொந்த தியேட்டர் பிசினஸிலேயே இவ்வளவு பெரிய சலுகையை வாரி வழங்கிய செய்தி, தற்போதைய புது மனைவியின் காதுக்குச் சென்றுள்ளது. இதனால் புது மனைவி செம கடுப்பில் இருக்கிறாராம். "பிரிந்த பிறகும் எதற்கு இந்தத் தேவையில்லாத தாராளம்? உங்களை இன்னும் அவர் பயன்படுத்திக் கொள்கிறார்" என்று வீட்டில் சண்டையே வெடித்துள்ளதாகத் தகவல். நடிகரின் இந்த பாசப் போராட்டம் எங்கு போய் முடியுமோ என்று கோலிவுட்டே வேடிக்கை பார்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications