அட போங்கப்பா.. அடுத்த மாதம் தான் டாப் நடிகர் பட அப்டேட்டே வருமாம்.. ரசிகர்களை இப்படி ஏமாற்றலாமா?

By Staff

சென்னை: டாப் நடிகரின் அடுத்த படத்தை அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிடும் போல இருக்கே என கோலிவுட்டில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தயாரிப்பு தரப்பின் நம்பர் கேம் ஆட்டத்தை புரிந்து கொண்ட டாப் நடிகர் திடீரென வேறமாதிரியான பிரேக் போட்டு தயாரிப்பு தரப்பை அதிர்ச்சியில் ஆக்கி உள்ளதாக கூறுகின்றனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு அப்டேட்டை வெளியிடலாம் என நினைத்த தயாரிப்பு நிறுவனத்துக்கும் ரசிகர்களுக்கும் பெரிய அல்வா கொடுத்து விட்டாராம் அந்த டாப் நடிகர்.

நம்பர் கேமுக்கு ஆப்பு

நம்பர் கேமுக்கு ஆப்பு

ஏற்கனவே மாஸ் நடிகருடன் டாப் நடிகரை மோத விட்டு தேவையில்லாமல் அந்த தயாரிப்பு நிறுவனம் நடிகரை ரொம்பவே அசிங்கப்படுத்தியதால் அப்செட்டில் இருக்கும் நடிகர், அதிரடியாக இயக்குநரை மாற்றுவது, இசையமைப்பாளரை மாற்றுவது என நடிகருக்கு பிடிக்காத வேலைகளை செய்து வந்த நிலையில், மீண்டும் ஒருமுறை அவர்களின் அந்த நம்பர் கேம் ஆட்டத்திற்குள் வர விரும்பவில்லை என்பதை நடிகர் மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறாராம்.

கடல்லே இல்லையாம்

கடல்லே இல்லையாம்

இந்த மாதம் நடிகரின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்க அவசர அவசரமாக தயாரிப்பு நிறுவனம் ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில், நடிகர் கடைசி நேரத்தில் கொஞ்சம் பொறுமையா இருங்க என கட்டையை போட, அப்டேட் கேட்கும் ரசிகர்களுக்கு கடல்லே இல்லையாம் என தயாரிப்பு தரப்பு தெரிவித்து வருவதாக கூறுகின்றனர்.

டூர் இன்னும் முடியல

டூர் இன்னும் முடியல

தான் கொடுத்த டைமுக்குள் ஏற்பாடுகள் நடக்கவில்லை என்றும், தான் தொடங்கிய டூர் இன்னும் முடியவில்லை. விரைவில், தனது டூரை முடித்து விட்டு வருகிறேன். எல்லா ஏற்பாடுகளையும் எந்தவொரு பிசிறும் இல்லாமல் பக்காவாக பண்ணி வைங்க, அந்த புதிய இயக்குநருக்கும் கொஞ்சம் டைம் கொடுங்க, அவசரகதியில் பண்ணினால் எதுவும் சரியா வராது என நடிகர் ஆஃப் செய்ய தயாரிப்பு தரப்பு ஆடிப் போய் விட்டதாம்.

அடுத்த மாதம் தானாம்

அடுத்த மாதம் தானாம்

இந்த மாத இறுதிக்குள் டாப் நடிகர் படத்தின் இயக்குநர் யார் என்கிற அறிவிப்பையாவது வெளியிடலாம் என நினைத்து இருந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு, ப்ரோமோ வீடியோவுடன் அறிவிப்பை அட்டகாசமாக வெளியிடலாம் என ஐடியா கொடுத்து விட்டு, அதற்கான ஷூட்டிங்கிற்கு வருவதற்கு கொஞ்சம் டைம் ஆகும் என அனைத்து பிளான்களையும் அப்படியே கிடப்பில் போட்டு வைக்க காரணம் ஆகி உள்ளார் என்றும் அடுத்த மாதம் தான் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த அப்டேட் வந்தால் வரும் என்கின்றனர்.

ரசிகர்கள் பாவமில்லையா

ரசிகர்கள் பாவமில்லையா

தயாரிப்பு தரப்பு இதற்கு மேல் நடிகருக்கு பிரஷர் கொடுத்தால் தயாரிப்பு தரப்பையே மாற்றிவிட்டு வேறு படம் பண்ண போயிடுவார் என்கிற பயத்தால் ரசிகர்கள் பாவமில்லையா என்று நடிகர் தரப்புக்கு அழுத்தம் கொடுக்க, என் ரசிகர்கள் எனக்காக எத்தனை வருஷம் வேணா காத்திருப்பாங்க, ஆனால், அவங்களுக்காக நான் அடுத்து நல்ல படத்தை கொடுக்கணும், அவசரப்படாதீங்க, அவசரப்படுத்தாதீங்க என அதிரடியாக நடிகர் சொல்லி தயாரிப்பு தரப்பை கதிகலங்க செய்துள்ளதாக பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இயக்குநர் நிம்மதி

இயக்குநர் நிம்மதி

நடிகர் மேலும், இயக்குநருக்கு நேரத்தை ஒதுக்கி கொடுத்துள்ள நிலையில், இயக்குநர் பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்திருக்கிறாராம். அடுத்த படத்திற்கு ஆக வேண்டிய பணிகளை தனது டீம் உடன் நேர்த்தியாக செய்ய நேரம் கிடைத்துள்ளது என ஹேப்பி ஆகி உள்ளாராம். இந்த படம் தாமதமாகும் என்பதை புரிந்து கொண்ட தயாரிப்பு தரப்பு வேக வேகமாக ஏற்கனவே அறிவித்த பிரம்மாண்ட படத்தின் ரிலீஸை சொன்ன தேதியில் வெளியிட வேலையை ஆரம்பித்து விட்டதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X