கேட்ட சம்பளம் வந்தா படம் பண்றேன்.. இல்லைன்னா விட்ருங்க.. டாப் கியர் போட்ட டாப் நடிகர்?
சென்னை: டாப் நடிகரை எப்படியாவது மடக்கி விடலாம் என சிலர் திட்டமிட்டு சதி செய்து வருவதை புரிந்துக் கொண்ட நடிகர் சம்பளத்தை எல்லாம் குறைத்துக் கொள்ளும் ஐடியாவிலேயே தான் இல்லை என்பதை ஓபனாகவே போட்டு உடைத்து விட்டார் என்கின்றனர்.
நடிகர் தான் இத்தனை ஆண்டுகளாக திரைத்துறையில் சாதித்த விஷயங்கள் மற்றும் தனது மார்க்கெட் என்ன என்பது குறித்து நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார். ஆனால், அவருடைய மார்க்கெட்டை புரிந்துக் கொண்டு படம் பண்ண சரியான ஆள் கிடைக்காத நிலையிலேயே அவரது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய நம்பர்ஸை எடுக்கவில்லை என்கின்றனர்.

ஆனால், அது தன்னுடைய தவறு இல்லை என்றூம் சரியாக பயன்படுத்தும் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார்கள் என்றும் ஆனால், நான் என் இடத்தில் இருந்து எப்படி இறங்கி வர முடியும் என்பதை கோரிக்கை வைத்த சிலரிடம் தெளிவாகவே கூறிவிட்டாராம்.
டாப் நடிகருக்கு தடை: வாழ்க்கையில் ஏகப்பட்ட தடைகளை பார்த்து அடிகளை தாண்டி இந்த இடத்துக்கு வந்த நடிகரை இந்த முறை சிலர் முடக்கி விட வேண்டும் என்றும் மடக்கி விட வேண்டும் என்றும் நினைத்து செக் வைக்க பார்த்தாலும், நடிகர் அதற்கெல்லாம் அடங்கி போகுற ஆளா நான் என்பது போல அசால்ட்டாக தனது ரூட்டை பிடித்து டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறாராம்.
அதுக்கு வாய்ப்பே இல்லை: நடிகரை கட்டுக்குள் கொண்டு வர அவரது சம்பள விஷயத்தில் கை வைக்க சிலர் ஏற்பாடுகள் செய்த நிலையில், அதையெல்லாம் பெரிதாக கண்டுக் கொள்ள வேண்டாம் என தனது அடுத்த பட இயக்குநரிடம் தெளிவாக சொல்லிவிட்டாராம். தனக்கு ஏற்ற ஊதியத்தை தரக்கூடியவர்கள் சீக்கிரமே வருவார்கள், நீங்க ஒன்றும் பதட்டப்பட வேண்டாம் என்றும் எதற்கும் அஞ்ச வேண்டாம் என ஊக்கம் கொடுத்துள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.
தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடி: சில தயாரிப்பாளர்களுக்கு நடிகரை வைத்து படம் பண்ணக் கூடாது என்கிற நெருக்கடி நிலை உருவாகி உள்ளது தான் அவருடைய சம்பளத்தில் கை வைத்தே தீர வேண்டும் என்கிற பேச்சு எழுவதற்கே அடிப்படையான காரணம் என்கின்றனர். அதனால், நடிகரை வைத்து படம் தயாரிக்க நினைத்த சில தயாரிப்பாளர்களுக்கு உண்மையாகவே வருத்தம் தான் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











