மனைவி ஆசைக்காகவா?.. அரசியல் லாபத்துக்காகவா?.. டாப் நடிகரிடம் ஏற்பட்ட மற்றம்.. கிளம்பிய கிசுகிசு!
சென்னை: டாப் நடிகரிடம் திடீரென ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் இதையெல்லாம் தனது மனைவியின் ஆசைக்காக மட்டுமே செய்து வருவதாக ரசிகர்கள் ஒருபக்கம் சொல்லிக் கொண்டிருக்க, சில பிரபலங்கள் அதெல்லாம் கிடையாது என்றும் இதற்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருப்பதாகவும் பற்றவைத்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் திடீரென பக்கா பாதுகாப்புடன் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறாமல் டாப் நடிகர் செம கூலாக வந்து சென்றது பெரும் ஆச்சர்யத்தை சினிமா வட்டாரத்தில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளதாக கூறுகின்றனர்.

நடிகர் ஒருவர் திரையரங்கிற்கு சென்றபோது பெரும் சர்ச்சை வெடித்த நிலையில், அந்தளவுக்கு ஏதும் ஆகாமல் நடிகரை பாதுகாத்தது மற்றும் அந்த நிகழ்ச்சியை பார்க்க அவரை அழைத்து வந்தது என அனைத்துமே அந்த பெரிய கட்சி பார்த்த வேலை தான் என்கின்றனர்.
மாஸ் நடிகருக்கு எதிராக: மாஸ் நடிகர் அரசியல் கட்சியை ஆரம்பித்து அந்த பெரிய கட்சிக்கு எதிராக பிரச்சாரத்தை செய்து வரும் நிலையில், அவருக்கு எதிராக தங்களுக்கும் ஒரு சினிமா முகம் தேவைப்படும் நிலையில், டாப் நடிகரை அவருக்கு எதிராக கொண்டு வந்து தங்களது பலத்தை நிரூபிக்கும் விதமாக நடந்த முயற்சி தான் நேற்றைய நிகழ்ச்சி என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மனைவியின் ஆசை: அதெல்லாம் கிடையாது என்றும் அந்த நடிகருக்கு அரசியல் எல்லாம் தெரியாது. அவர் தனது மனைவியின் ஆசைக்காக மட்டுமே நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்துடன் வந்து சென்றார் என்றும் அவரது வருகையை அந்த கட்சி தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக் கொண்டு சோஷியல் மீடியாவில் மாஸ் நடிகருக்கு எதிரான வேலையை பக்காவாக பார்த்து வருகிறது என்றும் ரசிகர்கள் மறுத்து வருகின்றனர்.
டிவி கம்பெனி ஓனர்: நடிகரை அந்த பெரிய கட்சியின் சொந்தக்காரர்கள் நடத்தும் டிவி கம்பெனியின் ஓனர் தான் நிகழ்ச்சிக்கு வரவழைத்துள்ளார் என்றும் அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்த நிலையில், நடிகர் அவருடன் ரொம்ப நேரம் நிகழ்ச்சி நடந்த இடத்தில் பேசியதாகவும் வாரிசு நடிகை அங்கே வந்ததன் பின்னணியிலும் அரசியல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
அடுத்த படத்துக்கான அஸ்திவாரம்: ஆனால், இதில், அரசியல் எதுவும் இல்லை என்றும் நடிகரின் அடுத்த படத்தை பிரம்மாண்டாமாக அந்த டிவி நிறுவனம் உருவாக்கும் முயற்சியில் உள்ளதாகவும் டாப் நடிகர் மற்றும் தமாஸ் நடிகர் இணைந்து படம் நடிக்கப் போவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை தான் நேற்று நடைபெற்றது என்றும் இன்னொரு தரப்பு கிசுகிசுத்து வருகின்றன. இதில், எது உண்மை என்பது சீக்கிரமே கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்குத்தானே வரும் என வருவதை வேடிக்கை பார்க்கலாம் என சிலர் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











