மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!

By Staff

சென்னை: டாப் நடிகர் பட வாய்ப்பு கிடைத்தது என ஆசை ஆசையாக சென்ற அந்த இயக்குநருக்கு பெரிய ஆப்பு வைக்கப்பட்டு இருப்பதாக பகீர் கிளப்புகின்றனர். தயாரிப்பு நிறுவனத்துக்கும் நடிகருக்கும் இடையே ஏற்பட்ட சிக்கல் காரணமாக சிக்கித் தவித்து வருவது என்னமோ அந்த இயக்குநர் தான் எனக் கூறுகின்றனர்.

டாப் நடிகர்களுடன் சேர்ந்து வேலை பார்ப்பது சமீப காலமாக இயக்குநர்களுக்கு சவாலாக மட்டுமின்றி சாவு பயத்தையே காட்டி வருகிறதாம். எப்போ யாருக்கு மண்டை சூடாகும், என்ன பிரச்சனை வெடிக்கும் என்கிற சிந்தனையிலேயே கிரியேட்டிவிட்டியை மொத்தமாக விட்டு விடுவதாக கூறுகின்றனர்.

Top actor totally avoids his current movie due to these reasons

ஹீரோக்களே சமீப காலமாக இயக்குநர்களிடம் ஆங்கில படங்களின் லிங்குகளை கொடுத்து இதே போல எடுத்துக் கொடுங்க என்றும் டார்ச்சர் செய்து வருவதாக பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

வரவே மாட்டேன்: டாப் நடிகர் மீண்டும் தனது படத்தை தொடங்கி முடித்துக் கொடுப்பார் என இயக்குநர் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தேர்தல் முடிந்தும் நடிகர் வரவே மாட்டேன் என்கிற முடிவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை மொத்தமாகவே முடித்து விட நடிகர் முடிவு செய்து விட்டார் என பகீர் கிளப்புகின்றனர்.

தயாரிப்பு நிறுவனம் தான் காரணமா?: டாப் நடிகர் அந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைக்க காரணமே தயாரிப்பு நிறுவனம் தான் எனக் கூறுகின்றனர். அவர் அளித்த கால்ஷீட்டை மீறி பல மாதங்கள் ஷூட்டிங்கை தயாரிப்பு நிறுவனம் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் இழுத்தடித்துக் கொண்டே சென்றதால் நடிகர் கடுப்பாகி விட்டார் எனக் கூறுகின்றனர்.

லைஃப் போயிடும்: இந்த படம் இதுவரை கஷ்டப்பட்டு எடுத்து முடித்த நிலையில், அப்படியே டிராப் ஆனால், தன்னுடைய லைஃப்பே காலியாகி விடும் என அந்த இயக்குநர் ரொம்பவே ஃபீல் பண்ணி தன்னுடைய சினிமா நண்பர்களிடம் பேசியுள்ளதாக கூறுகின்றனர். தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து 2 பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்களின் பிசினஸை சூடு படுத்த காரணமே இந்த படத்தை முடித்து விடும் நோக்கத்தில் தான் என்றும் ஜூன் மாதத்துக்கு மேல் தான் டாப் நடிகரின் படத்துக்கு வழி பிறக்கும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X