டாப் நடிகர் பட பிசினஸ் இன்னமும் ஆரம்பிக்கவே இல்லையாம்.. அந்த டென்ஷனில் தான் இப்படியொரு முடிவா?
சென்னை: டாப் நடிகரின் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே தியேட்டர் ஓனர்களுக்கு ஜாக்பாட் அடித்த நிலை தான்.
ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அந்த டாப் நடிகர் சிக்கிக் கொண்ட தயாரிப்பாளர் தரப்பு தான் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் என சொல்கின்றனர்.
படத்தின் பிசினஸ் வேலைகளை எப்போவோ முடித்திருக்க வேண்டிய நிலையில், இன்னமும் ஃபைனல் பண்ணாமல் இழுத்து அடிப்பதால் தான் அந்த நடிகர் ரொம்பவே டென்ஷன் ஆகி உள்ளார் எனக் கூறப்படுகிறது.

சங்கடத்தில் ரசிகர்கள்
டாப் நடிகரின் அசத்தலான ஆக்ஷன் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதை எண்ணி அவரது ரசிகர்கள் ரொம்பவே சந்தோஷத்தில் இருந்து வந்த நிலையில், திடீரென ரசிகர்களை சங்கட பட வைக்கும் விதமாக அதிரடி அறிவிப்பை அந்த நடிகர் வெளியிட்டு ஷாக் கொடுத்து இருக்கிறார்.

பிசினஸ் முடியல
மாஸ் நடிகரின் படத்திற்கு பூஜை போடுவதற்கு முன்பாகவே பல கோடி பிசினஸ் என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், டாப் நடிகரின் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் கூட இன்னமும் பிசினஸ் முடியவில்லை என வெளியாகி உள்ள தகவல்கள் சினிமா உலகினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் அப்செட்
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு பிரச்சனை காரணமாக இறுதி முடிவு எட்டப்படவில்லையே என செம அப்செட்டில் உள்ளாராம் டாப் நடிகர்.

கோபத்தில் எடுத்த முடிவு
அந்த கோபத்தில் இருந்த நடிகரிடம் ரசிகர்கள் சண்டை பிரச்சனையை தேவையில்லாமல் வேண்டியவர்கள் சிலர் பற்ற வைக்கவே கோபத்தில் அந்த பெயரே தனக்கு வேண்டாம் என டாப் நடிகர் அதிரடியாக முடிவு எடுத்து அறிவிக்க சொல்லி விட்டதாக கோடம்பாக்கத்தில் ரகசியமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

பாராட்டு இல்லை
சமீபத்தில் வெளியான விரல் நடிகர் படத்துக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்த நிலையில், டாப் நடிகர் எந்தவொரு பாராட்டையும் தெரிவிக்கவில்லையாம். அதற்கு காரணம் சமீபத்தில் அந்த படத்தின் நடிகர், இயக்குநர் உள்ளிட்டவர்கள் செய்த சில காரியங்கள் தான் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











