Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அங்க பிசினஸ் அனல் பறக்குது.. நம்ம படத்தை வாங்க ஒருத்தனும் வர மாட்றானே.. புலம்பும் தயாரிப்பாளர்!
சென்னை: மாஸ் நடிகரின் படத்திற்கு மொத்த பிசினஸும் நடைபெற்று வரும் நிலையில், டாப் நடிகரின் படத்தின் பிசினஸ் இன்னும் பிள்ளையார் சுழியே போடவில்லையே என தயாரிப்பாளர் அப்செட் ஆகி உள்ளாராம்.
பண்டிகை தேதியை குறிவைத்து சொன்ன நேரத்தில் படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் ஜெட் வேகத்தில் மாஸ் நடிகரின் படக்குழு செய்து வருகிறது.
ஆனால், படத்தை எடுக்கவே ஃபைனான்ஸ் கிடைக்காமல் டாப் நடிகரின் படம் தள்ளாடுது என ஏகப்பட்ட ட்ரோல்கள் கிளம்பி உள்ள நிலையில், ஏதாவது பிசினஸ் நடந்தால் கூட கடைசி போர்ஷனை முடித்து விடலாமே என தயாரிப்பாளர் புலம்பி வருகிறாராம்.
விக்ரமுக்காக பிக் பாஸை பாதியிலே விட்டுப் போனாரே கமல்.. இப்போ இந்தியன் 2வ எப்படி சமாளிக்கப் போறாரு?
தள்ளிப் போகாதே
இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்த்த அந்த படம் ஆரம்பத்தில் வெளியாகி சொதப்பிய நிலையில், உடனடியாக அடுத்த படத்தைக் கொடுத்து வசூலை வாரி விட வேண்டும் என டாப் நடிகர் கடுமையாக உழைத்து வந்தார். ஆனால், அவருக்கு கிடைத்த சூப்பரான தயாரிப்பாளர் சொதப்பல் காரணமாக படம் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சொன்ன தேதியில் வெளியாகாமல் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகும் நிலை உருவாகி உள்ளது.
சூடு பிடித்த பிசினஸ்
எந்தவொரு ஹைப்பும் இல்லாமல், மாஸ் நடிகர் ரசிகர்களே மட்டம் தட்டி வந்த அந்த படத்தின் தயாரிப்பாளர் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் அளவுக்கு மிகப்பெரிய பிசினஸை அதற்குள் செய்து முடித்து விட்டார் என்கிற தகவல் தற்போது டாப் நடிகரின் படக்குழுவுக்கு இடியாய் வந்து இறங்கி உள்ளது.
முடிக்க முடியமல் தவிப்பு
சொன்ன தேதியில் ரிலீஸ் செய்வதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், படத்தை முழுதாக முடிக்கக் கூட முடியாமல் போய் விட்டதே என இயக்குநர் ரொம்பவே ஃபீல் பண்ணி இந்த படத்தையும் நடிகரும் தயாரிப்பாளரும் சேர்ந்து சொதப்ப வைத்து விடுவார்கள் போல என நினைத்து நினைத்து பெரும் சோகத்திலேயே ஆழ்ந்து விட்டாராம்.
டென்ஷனில் தயாரிப்பாளர்
ஹீரோவுக்கும், இயக்குநருக்கும் சரியான பதிலை சொல்ல முடியாமல், பிசினஸையும் ஆரம்பிக்க முடியாமல் தயாரிப்பாளரும் ரொம்பவே டென்ஷனாகி உள்ளாராம். டாப் நடிகர் படத்தின் பிசினஸ் அதிரடி காட்டி வரும் நிலையில், நடிகர் சம்மதித்தால் நம்முடைய படத்துக்கான பிசினஸ் வேலைகளையும் ஆரம்பிக்கலாம் என தயாரிப்பாளர் நினைத்தாலும், படத்தை முடிக்காமல் எதையும் பண்ண வேண்டாம் என நடிகர் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிட்டாராம். அடுத்த ஷெட்யூலுக்கு மேலும், இயக்குநர் பெரிய பில் போட்டுக் கொடுத்துள்ள நிலையில், எப்போ ஆரம்பித்து, எப்படி முடிக்கப் போகின்றனரோ என படக்குழுவே விழி பிதுங்கி உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.