படத்தை பார்த்துட்டு ஒண்ணுமே சொல்லலயாம்.. உச்ச நடிகரின் யோசனையால் அந்த படத்திற்கு வந்த சிக்கல்?
சென்னை: மாஸ் நடிகரின் லேட்டஸ்ட் ரிலீஸ் படத்தை பார்த்த உச்ச நடிகர் படத்தை பார்த்து விட்டு லேசா சிரித்து விட்டு சென்று விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவின் பெரிய இயக்குநர்களை ஒதுக்கி வைத்து விட்டு இளம் இயக்குநர்களை நம்பி பெரிய நடிகர்கள் தொடர்ந்து படங்களை கொடுத்து வருகின்றனர்.
சிறு படங்களில் வெற்றி பெறும் இயக்குநர்கள், பெரிய நடிகர்கள் படங்கள் என வரும் போது முழு சுதந்திரமாக பணியாற்ற முடிவதில்லை என்பதும் அவசர அவசரமாக பெரிய நடிகர்களுக்கு ஸ்க்ரிப்ட் செய்ய நிர்பந்திக்கப்படுவதும் தான் காரணம் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

வெறும் பில்டப்
சரியான அழுத்தமான திரைக்கதையை உருவாக்காமல் மாஸ் நடிகரை வைத்து மாஸா காட்டினால் போதும் படம் ஓடிவிடும் என நினைத்தது தான் அந்த இளம் இயக்குநர் செய்த பெரிய தவறு என பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பெரிய இயக்குநர்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் காணமல் போவதற்கும் திறமையான இயக்குநர்களுக்கு வாய்ப்புகளை வழங்காமல் ஹீரோக்கள் இழுத்து அடிப்பதால் தான் இந்த நிலைமை என்கின்றனர்.

உச்ச நடிகர் படமும்
மாஸ் நடிகரை தொடர்ந்து உச்ச நடிகரின் அடுத்த படத்தையும் இதே இளம் இயக்குநர் தான் பண்ண போகிறார். ஆரம்பத்தில் முடியாது என மறுத்த இளம் இயக்குநர் தொடர்ந்து கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக அவசர அவசரமாக ஒரு கதையை ரெடி பண்ணி ஓகே பண்ணி விட்டார். எப்படியும் மாஸ் நடிகரின் படம் ஓடினால் நம்ம படமும் நல்லா வரும் என்றே உச்ச நடிகர் ஓகே சொல்லி இருக்கிறார்.

படம் பார்த்த நடிகர்
நேற்று மாலை சிறப்பு ஏற்பாடுகளுடன் அந்த உச்ச நடிகருக்கு மாஸ் நடிகரை வைத்து இளம் இயக்குநர் இயக்கிய படத்தை போட்டு காட்டி உள்ளனர். நடிகரும் ரொம்பவும் ஆர்வமாக படத்தை பார்த்த நிலையில், சற்று நேரத்திலேயே அப்செட் ஆகி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனாலும், இறுதி வரை அமைதியாக படத்தை முழுவதுமாக பார்த்து முடித்திருக்கிறார் நடிகர்.

எதுவும் சொல்லவில்லையாம்
படம் முழுவதும் முடிந்தவுடன் சின்னதாக ஒரு ஸ்மைல் மட்டும் பண்ணி விட்டு அங்கிருந்து எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டதாகவும் படத்தை பார்த்தேன் படக்குழுவினரை பாராட்டினேன் என நடிகர் தரப்பில் இருந்து ஒரு சின்ன வாழ்த்து கூட வராதது தயாரிப்பு தரப்பை ரொம்பவே அதிருப்தி அடைய செய்துள்ளதாக கூறுகின்றனர்.

அடுத்த படம் என்ன ஆகும்
படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு விட வேண்டும் என்பதில் இயக்குநர் மற்றும் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்த நிலையில், தான் அந்த அப்டேட் வெளியானது. ஆனால், இப்படியொரு சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், உச்ச நடிகர் இதே இயக்குநருடன் அடுத்த படத்தை தொடருவாரா? இல்லையா? என்பது குறித்து விரைவில் தெரியவரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











