Don't Miss!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Finance
தைவான் மீது கைவைக்க தயங்கும் சீனா.. இதுதான் காரணமா..?
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
கிளைமேக்ஸ் சுத்தமா புடிக்கல.. நல்லா டைம் எடுத்து எழுதுங்க.. கடுப்பில் கிளம்பினாரா டாப் நடிகர்?
சென்னை: நம்பர் நடிகை உள்ளிட்ட பிரபலங்களின் திருமணத்துக்கு கூட வர முடியாமல் டபுள் கால்ஷீட் போட்டு ஒர்க் பண்ணிட்டு இருந்த மனுஷன் திடீரென படப்பிடிப்பை அதிரடியாக நிறுத்த இயக்குநர் பண்ண வேலை தான் காரணம் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
போன தடவையே ஹாலிவுட் லெவல் படம் சாருன்னு அளந்து விட்டு பல ஹாலிவுட் படங்களின் காட்சிகளை காப்பி அடித்து வைத்திருந்தார் அந்த இயக்குநர்.
இந்நிலையில், இந்த முறை அந்த தப்பெல்லாம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு கடைசியில் கிளைமேக்ஸ் காட்சியிலேயே மிகப்பெரிய தில்லாலங்கடி வேலை பார்த்திருப்பது நடிகருக்கு தெரிந்து விட்டதாம்.
யூடியூபர்கள்
முதல்
நாள்
முதல்காட்சி
ஃபேன்ஸ்
ரிவ்யூவில்
செய்யும்
மோசடி..அம்பலப்படுத்திய
சிபிராஜ்

கன்டென்ட் கிடைக்கலைன்னா காப்பி
நல்ல திரைக்கதைக்கான காட்சிகளை சிந்திக்க முடியாத இயக்குநர்கள் உலகில் ஏற்கனவே அதுபோன்ற படங்களில் வந்த காட்சிகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து விடுகின்றனர். டாப் நடிகரை வைத்து படம் இயக்கி வரும் அந்த இயக்குநரும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை அவரது போன படம் புட்டு புட்டு வைத்து விட்டது. இந்நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு தவறை அவர் செய்திருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

டூருக்கு காரணம்
எந்தவொரு விழாவிலும் கலந்து கொள்ளாமல் அல்லும் பகலும் இயக்குநர் சொல்வதற்கெல்லாம் எந்தவொரு மறுப்பையும் தெரிவிக்காமல் தனக்கு தேவையான காட்சிகளை கூட வைக்க சொல்லாமல் வெற்றி ஒன்றே இலக்கு என ஓடிக் கொண்டிருந்த அந்த நடிகர் திடீரென ரிலாக்ஸ் மூடுக்கு செல்ல காரணமே அவருக்கு ஏற்பட்ட உச்சக்கட்ட கோபம் தான் என்கின்றனர்.

கிளைமேக்ஸ் சரியில்லை
எடுத்த வரைக்கும் படம் அட்டகாசம் வந்ததை பார்த்து சந்தோஷத்தில் டபுள் கால்ஷீட் எல்லாம் போட்டு இந்த ஆண்டு அந்த பெரிய பண்டிகையை தெறிக்கவிடலாம் என நினைத்துக் கொண்ட நடிகருக்கு பெரிய குண்டை தூக்கிப் போடும் அளவுக்கு கிளைமேக்ஸ் காட்சியில் இயக்குநர் பண்ண வேலை ஆகிவிட்டதாம். முதலில் அந்த காட்சியை பாராட்டி எல்லாத்துக்கும் ஓகேன்னு சொல்லி ஏற்பாடு செய்த நிலையில், நடிகரின் ஆன்லைன் ஸ்பைகள் மூலம் இது எந்த படத்திலாவது இருக்கிறதா? என்பதை வேவு பார்க்க சொல்லி இருக்கிறார். அவர்கள் அளித்த ரிப்போர்ட் தான் படப்பிடிப்பை அப்படியே நிறுத்தி விட்டு நடிகர் புறப்பட்டு விட்டாராம்.

யோசிச்சு எழுதுங்க
ஒன்றும் அவசரமில்லை. பொறுமையா ரிலீஸ் பண்ணிக்கலாம். நான் உங்களை அர்ஜெண்ட் பண்ணா, நீங்க இப்படித்தான் எதையாவது அவசரமாக எடுத்து வைப்பீர்கள். டைம் எடுத்துக்கோங்க, நல்லா யோசிங்க இந்த முறை மிஸ் ஆகக் கூடாது என சொல்லி விட்டு சென்றது தான் இந்த தாமதத்திற்கு காரணம் என கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.