எதுவுமே வொர்க்கவுட் ஆகல.. கடும் விரக்தியில் டாப் நடிகர்.. மீண்டும் பயணம் தான் போல?

By Staff

சென்னை: ஒரு பக்கம் தயாரிப்பு தரப்பு கொடுக்கும் பிரஷர், மறுபக்கம் கழட்டி விடப்பட்ட இயக்குநர் கொடுக்கும் பிரஷர் என சமீப காலமாக செம டென்ஷனில் இருக்கிறாராம் டாப் நடிகர்.

இளம் இயக்குநர்களை நம்பி மாஸ் நடிகர் படம் கொடுத்து ஹிட் அடிப்பதை போலவே நாமும் செய்யலாம் என நினைத்த நடிகருக்கு கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான படமும் மாஸ் நடிகர் படத்தை பீட் செய்ய முடியவில்லையே என்பதால் அடுத்த படத்தை பார்த்து பார்த்து செய்ய பல சிக்கல்களை நடிகர் சந்தித்து வருகிறாராம்.

கொடுத்த வாக்கை மீறி

கொடுத்த வாக்கை மீறி

முன்பெல்லாம் தனக்கு செட் ஆகவில்லை என்றால் உடனடியாக இயக்குநரை தூக்கி எறிந்து விட்டு புதிய இயக்குநருடன் நடிக்க ஆரம்பித்து விடுவார். ஆனால், அதன் பிறகு அப்படி செய்தால் அந்த இயக்குநரின் எதிர்காலம் பாதிக்குமே என்பதால் பல இயக்குநர்களுடன் பல படங்கள், தோற்றாலும் பரவாயில்லை, ஜெயித்தாலும் பரவாயில்லை என கொடுத்த வாக்கை காப்பாற்றி வந்த நடிகர் கடைசியில் மீண்டும் பழைய நிலைக்கு மாறும் சூழல் உருவாகி விட்டதால் மிகவும் வேதனையில் உள்ளாராம்.

பணம் போடுறவங்க பிரஷர்

பணம் போடுறவங்க பிரஷர்

அதிரடியாக இயக்குநரை மாற்ற வேண்டும் என்றும் மாஸ் நடிகருக்கு அடுத்த முறை சரியான டஃப் கொடுக்கும் விதமாக புதிய படத்தை உருவாக்க வேண்டும் என பணம் போடும் தயாரிப்பாளர் திடீரென முடிவெடுத்தது தான் அத்தனைக்கும் காரணம் என்றும் டாப் நடிகருக்கு இந்த விவகாரத்தில் அவ்வளவாக உடன்பாடு இல்லை என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

எதுவும் செட்டாகல

எதுவும் செட்டாகல

அதிரடியாக அடுத்த இயக்குநரை ஓகே சொல்லி மாஸ் நடிகரின் பட அறிவிப்புகள் வரும் போது அதற்கு கிளாஷாக அப்டேட் விடலாம் என நினைத்ததும் கடைசி நேரத்தில் சரியாக வொர்க்கவுட் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது. புதிதாக இயக்குநரை தேர்வு செய்வதிலேயே தயாரிப்பு தரப்பும் நடிகர் தரப்பும் இரு வேறுபட்ட கருத்துக்களை முன் வைத்து வருவதாகவும் இன்னமும் அடுத்த பட இயக்குநரை இறுதி செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.

அந்த சிக்கல் இருக்கு

அந்த சிக்கல் இருக்கு

ஏற்கனவே மாஸ் நடிகருக்கு சொன்ன கதையை பட்டி டிக்கெரிங் பார்த்து டாப் நடிகருக்கு படம் பண்ணப் போகிறார் அந்த இயக்குநர் என்றும் பேச்சுக்கள் கிளம்பிய நிலையில், அவருக்கு பதிலாக வேறு நபரை மாற்றலாமா என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. புதிய கதை கேட்ட நிலையில், இயக்குநர் கொஞ்சம் நேரம் ஆகும் என்றும் சொல்லி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மீண்டும் லேட்

மீண்டும் லேட்

ஏற்கனவே நீக்கப்பட்ட இயக்குநருக்கு கொடுத்த நாட்களே அதிகமாக நடிகரின் கால்ஷீட்டை வீணடித்த நிலையில், தற்போது மேலும், இயக்குநர் மற்றும் கதையை லாக் செய்வதில் அதிக காலம் ஆகும் என்பதால் நடிகர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.

பயணத்துக்கு கிளம்பிடுவாரு

பயணத்துக்கு கிளம்பிடுவாரு

எல்லாம் சரியாக செட் ஆகவில்லை என்றால், உடனடியாக நீங்க எல்லாத்தையும் ரெடி பண்ணிடுங்க நான் என் பயணத்தை முடித்து விட்டு வருகிறேன் என கடுப்பில் நடிகர் கிளம்பி விட்டாலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய சிக்கலாக ஆகிவிடும் என்பதால், உடனடியாக மாற்று ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவதாக கூறுகின்றனர். என்ன ஆகப் போகிறதோ? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும் என கோடம்பாக்கத்தின் டீ கடைகளில் புலம்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X