என்ன டாப் நடிகர் இப்படி பண்ணிட்டாரே.. அந்த சீன் மட்டுமில்ல.. ஏகப்பட்ட காட்சிகளும் டூப் தானாம்!

By Staff

சென்னை: இதுவரை பல படங்களின் காட்சிகள் லீக் ஆன நிலையில், பதறாமல் இருந்த அந்த படக்குழு இந்த முறை மட்டும் அப்படி பதற காரணமே டூப் போட்டு நடித்த காட்சி அம்பலம் ஆனது தெரிந்து விட்டதால் தான் என்கின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால், அந்தவொரு காட்சி மட்டுமின்றி படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் டூப் போட்டுத்தான் எடுக்கப்பட்டு இருப்பதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

டாப் நடிகர் முந்தைய படத்திற்கு செய்ததை போலவே பல காட்சிகளை இப்போதும் டூப் போட்டு உங்க வசதிக்கு எடுத்துக்கோங்க என இயக்குநரிடம் சொல்லி விட்டாராம்.

பதறிய படக்குழு

பதறிய படக்குழு

சமீபத்தில் டாப் நடிகரின் படப்பிடிப்பு சென்னையின் முக்கியப் பகுதியில் நடைபெற்ற நிலையில், டாப் நடிகர் கலந்து கொள்கிறார் என ஒரு பெருங்கூட்டமே அங்கே குவிந்தது. ஆனால், அந்த ஷூட்டிங்ஸ்பாட்டில் அவருக்கு பதிலாக அவரை போலவே வேறு ஒரு டூப்பை வைத்து படமாக்கப்பட்ட உண்மை அம்பலமான நிலையில், ஒட்டுமொத்த படக்குழுவே பதறிப் போய் அந்த போட்டோக்களை யாரும் வெளியிடக் கூடாது என ஆர்டர் போட்டது.

லீக்கோ லீக்

லீக்கோ லீக்

மாஸ் நடிகரின் ஒட்டுமொத்த ஷூட்டிங் காட்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக லீக் ஆன நிலையிலும், அந்த படக்குழு தான் பொறுப்போடு அடுத்தடுத்த காட்சிகள் வெளியாகாமல் பார்த்துக் கொண்டது. ஆனால், டாப் நடிகரின் ஷூட்டிங்கில் இருந்து அப்படியொரு போட்டோ லீக் ஆன நிலையில், இயக்குநர் ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டாராம்.

எல்லாமே டூப்

எல்லாமே டூப்

ஏற்கனவே டாப் நடிகரின் முந்தைய படத்தில் முக்கிய ஸ்டன்ட் காட்சிகளிலெல்லாம் டாப் நடிகர் நடிக்கவில்லை, நான் தான் நடித்தேன் என அந்த ஸ்டன்ட் நடிகரே வெளிப்படையாக பேசியது பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், இந்த படத்திலும் ஏகப்பட்ட காட்சிகளில் டாப் நடிகருக்கு பதிலாக டூப் நடிகரை வைத்தே படத்தை இயக்கி உள்ளாராம் அந்த இயக்குநர் என பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

என்ன காரணம்

என்ன காரணம்

இயக்குநர் எதிர்பார்த்த அளவுக்கு உடல் எடையை டாப் நடிகரால் குறைக்க முடியாதது மற்றும் படத்தில் ஏகப்பட்ட ரிஸ்க்கான ஸ்டன்ட் காட்சிகளை இஷ்டத்துக்கு இந்த முறை இயக்குநர் வெறித்தனத்தோடு எழுதிவிட்டதால், பாதுகாப்பு கருதி அவருக்கு பதில் பாடி டபுளை அதிகளவில் பயன்படுத்தி உள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

ஓய்வு

ஓய்வு

அடுத்த படத்தில் பெரிய ஸ்டன்ட் காட்சிகள் எல்லாம் இல்லை என்பதால், அதை முடித்து விட்டு, தனது சொந்த ஆசைக்காக சில காலம் சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப் போகிறார் என்கிற பேச்சுகளும் கோடம்பாக்கத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றனர். நடிகரின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களுக்கு ரொம்பவே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X