Don't Miss!
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அதையெல்லாம் தூக்கிட்டு என்கிட்ட வராத.. அந்த இயக்குநரை எச்சரித்த டாப் நடிகர்.. என்ன ஆகப் போகுதோ?
சென்னை: டாப் நடிகரின் அடுத்த படத்தை இயக்கப் போகும் அந்த காதல் இயக்குநர் ஏகப்பட்ட மசாலாக்களையும் மாஸ் காட்சிகளையும் தூவிய நிலையில், கதையை படித்துப் பார்த்து கடுப்பாகி உள்ளாராம் டாப் நடிகர்.
காதலியின் தயவால் இத்தனை பெரிய வாய்ப்பு கிடைத்தும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் அந்த நடிகருக்கு போய் அப்படிப்பட்ட காட்சிகளை எல்லாம் வைத்தால், இப்படித்தான் வாங்கிக் கட்டிக் கொள்வார் என பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
என்ன ஆனாலும், தனக்கு அப்படிப்பட்ட காட்சிகள் கொஞ்சம் கூட செட் ஆகாது வேண்டாம் என சொல்லி விட்டாராம்.
கிசுகிசு எல்லாம் ஒரு மேட்டரா?… விட்டுத்தள்ளுங்க…மனம் திறந்த வாணி போஜன்!

காதலியால் கிடைத்த வாய்ப்பு
காதல் இயக்குநருக்கு காதலி நடிகை ஏற்பாடு செய்து கொடுத்த வாய்ப்பு காரணமாக அடுத்ததாக டாப் நடிகர் படத்தை இயக்கப் போகிறேன் என கெத்தாக காதலி கொடுத்த பரிசில் சுற்றி வருகிறாராம் அந்த இயக்குநர். ஆனால், திடீரென அந்த டாப் நடிகரிடம் இருந்து வந்த போன் கால் இயக்குநரின் ஹேப்பி மூடை முற்றிலுமாக நாசம் செய்து விட்டதாம்.

அரசியல் காட்சிகள்
கிடைத்த பெரிய வாய்ப்பை ஹிட் ஆக்கி விட வேண்டும் என அந்த நடிகருக்கு ஏகப்பட்ட அரசியல் காட்சிகளையும் படத்தின் வில்லனையே ஒரு முக்கியமான அரசியல் பிரபலத்தை சீண்டும் விதமாக எழுதப்பட்டு இருந்ததை பார்த்து டாப் நடிகர் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். உடனடியாக நேரில் வந்து சந்திக்க அந்த இயக்குநருக்கு அழைப்பு விடுக்க அவரும் என்ன விஷயம்னு தெரியலையேன்னு ஓடிப் போய் பார்த்தவருக்கு ஓவர் டோஸ் கிடைத்துள்ளதாம்.

எச்சரித்த நடிகர்
அந்த சாயலே வேண்டாம் என தெளிவாக ஒதுங்கி இருக்கிறேன். மீண்டும், தேவையில்லாமல் என் படத்தில் எதுக்கு இப்படி கதையையும் வசனங்களையும் வச்சிருக்கீங்க, இந்த போர்ஷன் முழுவதையும் உடனடியாக மாற்றி விடுங்கள். இல்லையென்றால், தொடர்ந்து நாம் இணைந்து பயணிக்க முடியாது என ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாராம் டாப் நடிகர்.

இயக்குநர் புலம்பல்
இயக்குநர்களின் திரைக்கதை விஷயத்தில் பெரிய நடிகர்கள் தேவையில்லாமல் தலையிடுவதால் தான் அவசர அவசரமாக வேற ஒட்டாத விஷயங்களை இணைத்து பண்ண வேண்டியிருக்கு, அப்படி படம் பண்ணி ஓடாமல் போனால், நாளைக்கு அந்த நடிகரை விட்டு விட்டு நம்மைத் தான் ரசிகர்கள் போட்டு பொழப்பார்கள் என புலம்பி வருகிறாராம் அந்த இயக்குநர். மேலும், அந்த காட்சிகளை நீக்கினால் அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடுமே, எப்படி அந்த காட்சிகளை மாற்றப் போகிறோம் என தனது உதவி இயக்குநர்களுடன் ரூம் போட்டு யோசித்து வருகிறாராம்.