எல்லாமே பணம் தான்.. மனைவியை மிரட்ட முடியாத மாஸ் நடிகர்.. விரக்தியில் உச்சகட்டம்!
சென்னை: சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்கள் பலருக்கும் இப்போது திடீரென 'அரசியல் ஆசை' வரத் தொடங்கியுள்ளது. அண்மையில் ஒரு மாஸ் ஹீரோ கட்சி தொடங்கி, குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்து இருக்கிறார். அவரை மக்கள் ஏற்றுக்கொண்ட போது நாம் ஏன் ஆகக்கூடாது? என்ற எண்ணம் இப்போது கோலிவுட்டின் ஒரு மூத்த மாஸ் நடிகரின் குடும்பத்திலும் புகுந்துவிட்டது. சமீபத்தில் மறைந்த ஒரு நடிகரின் மனைவி, தனக்கு இருக்கும் மிகக் குறைந்த சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டே, நூறு கோடி அளவிற்குப் பேச்சுவார்த்தை நடத்தி களமிறங்கினார். இதைப் பார்த்த அந்த மூத்த மாஸ் நடிகரின் மனைவிக்கு, நம்மிடம் இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும்போது, கணவரின் பெயரைப் பயன்படுத்தி ஒரு இயக்கத்தின் போர்வையில் ஏன் அரசியல் செய்யக்கூடாது? என்ற எண்ணம் வந்துவிட்டதாம்.
யாருடைய பிளான்? : மாஸ் நடிகரின் பெயரை வைத்து ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட்டு, அதன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுவாக, இந்த அறிவிப்பை அந்த மாஸ் நடிகரே நேரடியாக வெளியிட்டிருந்தால் அதற்குப் பயங்கர பவர் இருந்திருக்கும். ஆனால், அவரது மனைவி இந்த அறிவிப்பை முன்னின்று வெளியிட்டதுதான் இப்போது சினிமா வட்டாரத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் ரகசியங்களை உடைத்த சினிமா பிரபலம் ஒருவர், அந்த நடிகரின் மனைவிக்கு எப்போதுமே கணவரின் பிராண்ட் வேல்யூ, கொடி, போட்டோ என எதை வைத்தாவது பிசினஸ் செய்து காசாக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம். இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும்போது அதை எப்படிப் பணமாக்குவது என்று யோசித்து, ஒரு இயக்கத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இது என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.

விரக்தியில் உச்சகட்டம்: மனைவி செய்த இந்த வேலை மூத்த மாஸ் நடிகருக்குத் துளியும் உடன்பாடு இல்லை, அவர் ஒருவிதமான கடுமையான விரக்தி மனநிலையில் இருக்கிறாராம். இப்போது மட்டுமல்ல, எந்தக் காலத்திலுமே அவரால் தனது மனைவியைக் கண்ட்ரோல் செய்ய முடிந்ததே இல்லை. கடந்த காலத்தில் அந்த நடிகரின் சினிமா விவகாரங்கள், கால்ஷீட், வியாபாரம் என அனைத்திலுமே இந்த மனைவியின் தலையீடுதான் முழுமையாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், மாஸ் நடிகரின் மனைவிக்கு ஏற்கனவே வெளியில் நல்ல பெயரும் இல்லை. சர்ச்சைகளில் சிக்கியவர், இப்போது அரசியலிலும் கணவரின் பெயரைப் பயன்படுத்தப் பார்ப்பதுதான் வேதனை என்று அந்தத் திரை உலகப் பிரபலம் ஓப்பனாகப் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications