டாப் நடிகர்களின் அட்டகாசங்களை வெப்சீரிஸில் அம்பலப்படுத்திய இயக்குநர்.. அந்த காண்டு தான் காரணமா?

சென்னை: வேர்ல்ட் நடிகர், டாப் நடிகர், மாஸ் நடிகர் என ஒருத்தரையும் விடாமல் தனது மனசுல இருந்த பாரத்தை எல்லாம் கொட்டித் தீர்த்து இருக்காரு அந்த இயக்குநர்.

சமீபத்தில் வெளியான வெப்சீரிஸின் காட்சிகள் காட்டுத் தீயாகவும் ட்ரோல் மெட்டீரியலாகவும் பறந்து வருகின்றன.

முன்னணி நடிகர்கள் பண்ணும் அட்ராசிட்டிகளை பெயர் குறிப்பிடாமல் அப்படியே புட்டு புட்டு வைத்து இருக்கிறார்.

புது வெப்சீரிஸ்

புது வெப்சீரிஸ்

நீண்ட காலமாக இயக்குநராக நல்ல படங்களை இயக்கி வந்தாலும், இன்னமும் முன்னணி நடிகர்களுடன் படம் பண்ண முடியாமல் தவித்து வந்த இயக்குநர் அப்படியே ஓடிடி பக்கம் ஒதுங்கி ஒரு வெப்சீரிஸையும் இயக்கி உள்ளார். சினிமா சம்பந்தப்பட்ட அந்த வெப்சீரிஸில் முன்னணி நடிகர்களை சகட்டு மேனிக்கு விட்டு விளாசி இருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் எப்படி சம்மதித்தார்

நடிகர் எப்படி சம்மதித்தார்

தனக்கு பிடித்த முன்னணி நடிகர்களையே கழுவி ஊற்றும் கதையில் நடிக்க அந்த ஹீரோ எப்படி சம்மதித்தார் என்கிற கேள்வியையும் பல பிரபலங்கள் எழுப்பி உள்ளனர். கதை விறுவிறுப்பாக காரசாரமாக இருப்பதால், தனக்கு பூஸ்ட் கிடைக்கும் என இப்படியொரு வெப்சீரிஸில் நடித்து விட்டாரா? என்றும் விளாசி வருகின்றனர்.

 அட்டகாசங்கள் அம்பலம்

அட்டகாசங்கள் அம்பலம்

வெளிநாட்டு படங்களை பார்த்து காப்பியடித்து படம் பண்றாங்க, மகனுக்காக அப்பா பண்ணும் அலப்பறைகள், கதையை தனது இஷ்டத்துக்கு மாற்றும் டாப் நடிகரின் டார்ச்சர் என ஒன்று விடாமல் நடிகர்கள் திரைக்குப் பின்னால் இயக்குநர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் செய்யும் அத்தனை அட்டகாசங்களையும் காட்சிகளாக கொட்டித் தீர்த்து உள்ளார் அந்த இயக்குநர்.

அந்த காண்டு

அந்த காண்டு

பல ஆண்டுகளாக இயக்குநராக இருந்தும், நேற்று வந்த பச்ச புள்ளைகளுக்கு எல்லாம் படம் பண்ண சான்ஸ் கொடுத்து வரும் டாப் ஹீரோக்கள் மேல் உள்ள காண்டு தான் இப்படிப்பட்ட காட்சிகளை படம் முழுக்க தூவி அந்த இயக்குநர் தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டு இருக்கிறார் என கோடம்பாக்கம் முழுவதும் ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.

பெரிய சிக்கல்

பெரிய சிக்கல்

அந்த வெப்சீரிஸில் இத்தனை மேட்டர்கள் இருப்பதையும், தங்களை பற்றிய காட்சிகள் மறைமுகமாக அந்த இயக்குநர் திணிக்கப்பட்டதையும் அறிந்த நடிகர்கள் அந்த இயக்குநர் மீது பயங்கர கோபத்தில் உள்ளார்களாம். மறைமுகமாக அந்த நடிகருக்கும் அந்த இயக்குநருக்கும் பெரிய சிக்கலை உருவாக்கவும் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பேச்சுக்கள் பரபரக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X