ஒரு இரங்கல் கடிதமாவது வெளியிட்டு இருக்கலாமே.. டாப் நடிகர் மேல் செம அப்செட்டில் ரசிகர்கள்!

சென்னை: பிரபலம் ஒருவரின் மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

எந்தவொரு முன்னணி நடிகரும் இரங்கல் தெரிவிக்க நேரில் வராத நிலையில், மாஸ் நடிகர் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது வைரலானது.

ஆனால், டாப் நடிகரை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பிரபலத்தின் மறைவுக்கு ஒரு இரங்கல் கடிதம் கூட அவர் வெளியிடாதது ரசிகர்களையே அப்செட் ஆக்கி இருக்கிறது.

பப்ளிசிட்டி பிடிக்காது

பப்ளிசிட்டி பிடிக்காது

பொது நிகழ்வுகள் மற்றும் திரைத்துறை விழாக்களில் கலந்து கொள்ள அந்த டாப் நடிகருக்கு பிடிக்காது. அவரது பெயர் அரங்கம் அதிர ஒலித்தாலே ரசிகர்கள் சந்தோஷப்படும் நிலையில், ரசிகர்களுக்காக தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாமே என சிலர் கருதுவதும் உண்டு. ஆனால், பப்ளிசிட்டி பிடிக்காத காரணத்திற்காகவே அவர் அது போன்ற விழாக்களை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

துக்கத்திலாவது

துக்கத்திலாவது

சந்தோஷத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் திரைத்துறையை சார்ந்த பிரபலத்தின் துக்கத்திலாவது கலந்து கொள்ள வேண்டும். அதை கூட அந்த டாப் நடிகர் தவிர்த்து இருப்பதும், அதற்கு மாற்றாக அந்த மாஸ் நடிகர் சென்றதும் இணையத்தில் எதிர்த்து சண்டை போட முடியாத அளவுக்கு ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

ஏற்கனவே கோபம்

ஏற்கனவே கோபம்

டாப் நடிகரின் அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியிடாமல், ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் மேலும், ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது சமூக வலைதள பதிவுகள் மூலமே தெரிகிறது.

அறிமுகப்படுத்தியவர்

அறிமுகப்படுத்தியவர்

அந்த டாப் நடிகரை தான் தான் அறிமுகப்படுத்தினேன் என மறைந்த பிரபலமே நிகழ்ச்சி ஒன்றில் கூறிய வீடியோக்களையும் ஷேர் செய்து மாஸ் நடிகரின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்விட்டர் சண்டை போட்டு வருகின்றனர். அவர்களை எதிர்த்து வாக்குவாதத்தில் ஜெயித்தாலும், மனதளவில் ரசிகர்கள் வடுக்களோடு தான் உள்ளனர்.

இரங்கல் கடிதமாவது

இரங்கல் கடிதமாவது

நோய் தொற்று காரணமாக நேரில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் கூட, அட்லீஸ்ட் மற்ற நடிகர்களை போல வீடியோ மூலமாகவோ, அல்லது ஒரு இரங்கல் கடிதமாவது கூட வெளியிட்டு இருக்கலாமே? ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார் என அவரது ரசிகர்களே கடுப்பில் இருப்பதாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X