அடங்காத நடிகை.. கருக்கலைப்புவரை நிலைமை போய்டுச்சாம்.. சண்டைக்கு வந்த மாஸ் நடிகரின் மனைவி

By Staff

சென்னை: நம்பர் நடிகைக்கும், மாஸ் நடிகருக்கும் இடையே நீண்ட காலமாக ஒரு கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருப்பதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் நடிகரின் வீட்டிலும் பெரிய பூகம்பமாக வெடித்திருந்தது. இந்நிலையில் நம்பர் நடிகை கருக்கலைப்புவரை சென்றதை தெரிந்து ஒருவேளை நடிகர்தான் இதற்கும் காரணமாக இருப்பாரோ என்றும் குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

சினிமாவில் கடந்த பல வருடங்களாக டாப் 3 இடத்துக்குள் இருப்பவர் அந்த நடிகை. அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ரீல் ஜோடியாக நடித்துவிட்டார். அதேசமயம் ஒரு ஹீரோவுடன் மட்டும்தான் ரியல் வாழ்க்கையிலும் மறைமுக ஜோடியாகும் நிலைமை உருவாகிவிட்டது. நடிகருடன் சேர்ந்து நடித்த படங்களின்போது உருவான கெமிஸ்ட்ரி கேமராவை ஆஃப் செய்த பிறகும் பற்றிக்கொண்டதால் வந்த பஞ்சாயத்துதான் இது.

வீட்டில் பூகம்பம்: சில வருடங்களுக்கு முன்பு அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருந்த அவர்கள் இரண்டு பேரையும் நடிகரின் குடும்பத்தினர் ரொம்பவே கஷ்டப்பட்டு பிரித்தார்கள். இதனால் அவர்கள் நீண்ட காலத்துக்கு எந்தப் படத்திலும் ஜோடி சேரவே இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில்தான் சென்சேஷனல் இயக்குநர் ஒருவர் மீண்டும் அவர்களை ஜோடியாக்கினார். அப்போது மீண்டும் பற்றிக்கொண்டது இரண்டு பேருக்கும். இதனால் வீட்டில் பூகம்பமே வெடித்தது.

Top Actress Alleged Secret Affair With Leading Mass Hero Sparks Abortion Controversy in Kollywood

கிளம்பிய மனைவி?: நடிகையுடனான பழக்கத்தை உடனே நிறுத்துமாறு நடிகரிடம் அவரது மனைவி கெஞ்சி பார்த்தார், கோபமாக சொல்லிப்பார்த்தார். ம்ஹூம் எதற்கும் நடிகர் பிடிகொடுக்கவில்லை. தன்னையே அந்த அம்மணியிடம் இழக்கும் நிலைமைக்கு சென்றுவிட்டார். இதனால் கோபமடைந்த மனைவியாரோ தனது பிள்ளைகளை கையில் பிடித்துக்கொண்டு தன்னுடைய பிறந்த வீட்டுக்கே சென்றுவிட்டார்.

இங்கே அடிக்கும் கூத்து: மனைவி அப்படி சென்றதும் சில நாட்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தாராம் நடிகர். ஆனால் நடிகையின் முந்தானையை விட்டால்தான் நான் வருவேன் என்று சொல்லிவிட்டார். நடிகரோ நடிகையின் முந்தானையை விடவே இல்லையாம். மனைவி மட்டுமின்றி நடிகரின் நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் என யார் சொன்னாலும் கேட்பதாக இல்லை. நடிகையின் மடியைத்தான் குடி கொள்ளும் வீடாக நினைத்து இல்லாத கூத்தெல்லாம் அடித்திருக்கிறார்.

கருக்கலைப்பு: இந்நிலையில் புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் எழுந்திருக்கிறது. அதாவது நடிகருடன் அடித்த கூத்தில் நடிகை கர்ப்பமாகிவிட்டாராம். சில வாரங்களுக்கு முன்புதான் ரிசல்ட் பாசிட்டிவ் என்று வந்ததாம். இதை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகரோ உடனடியாக கருவை கலைக்க ரகசியமாக ஏற்பாடு செய்தாராம். அதற்கு தேவையான நடவடிக்கைகளை தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வீட்டில் வைத்தபடியே செய்திருக்கிறார்.

நடிகரின் வாரிசு நடிகையின் வயிற்றில் உருவான விஷயம் நடிகரின் மனைவிக்கு தெரிய; நேரடியாக நடிகைக்கு ஃபோன் செய்தாராம். ஆனால் அம்மணியோ எடுக்கவில்லை. உடனே எப்படியோ நடிகையின் தாய்க்கு ஃபோன் செய்து, இதை இப்படியே விட்டுக்கொண்டிருந்தால் இதற்கு எப்போதுதான் ஒரு முடிவு என்று கேட்க; உங்கள் கணவனை கண்டித்து வையுங்கள்; அவர்தான் குட்டி போட்ட பூனையாக எனது மகள் பின்னால் திரிகிறார். கருக்கலைப்பு செய்ததால் மகளின் உடலுக்குத்தான் பிரச்னை வரும் உங்களுக்கு என்ன என்று கேட்க; நீங்கள் எல்லாம் என்ன ஜென்மமோ என்று விட்டு விளாசிவிட்டாராம் நடிகரின் மனைவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X