கையில காசு வாயில தோசை.. அந்த வேலையை செய்ய பலகோடி கேட்கும் நம்பர் நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்?
சென்னை: நம்பர் நடிகையின் சமீபத்திய மாறுதலை பார்த்து திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. இதுவரை சமூக வலைதளத்தை பார்த்து பயந்து ஒதுங்கியிருந்த நம்பர் நடிகை திடீரென சோசியல் மீடியாவில் குதித்ததற்கு பின்னணியில் பெரிய பிசினஸே இருக்கிறது எனக்கூறுகின்றனர்.
சொந்த விஷயத்துக்காக நடிகை சமூக வலைத்தளத்தில் கால் பதித்தார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கல்யாணத்தையே காசு பார்க்கும் நோக்கில் நடத்திய நடிகை இந்த விஷயத்திலும் பணத்தை மையமாக வைத்து களம் இறங்கியுள்ளார் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

புரமோஷனுக்கு பெரிய தொகை: பாலிவுட் நடிகர் படத்தின் புரமோஷன் தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் செய்ய சில கோடி ரூபாய் நடிகை பெற்றுள்ளதாகவும் நடிகையின் போஸ்ட்க்கு பிறகு பல லட்ச டிக்கெட்டுகள் அந்த படத்திற்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் நடிகை நடித்த இன்னொரு படத்திற்கு பிரமோஷனுக்காக அவருக்கு எந்த தொகையும் வழங்காத நிலையில் தான் அவர் அந்தப் படத்திற்கு புரமோஷனை செய்யவில்லை என்றும் கூறுகின்றனர்.
கையில காசு வாயில தோசை: சமூக வலைதள பிரமோஷன் மட்டுமின்றி படம் வெளியாகும் வரை ஏகப்பட்ட இடங்களுக்கு தன்னுடன் வர வேண்டும் என பாலிவுட் நடிகர் போட்ட கட்டளையையும் நடிகை செய்ய ஒப்புக் கொண்டதாகவும் பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
கையில காசு வாயில தோசை என்கிற கணக்கில் தான் நம்பர் நடிகை தற்போது கணக்குப் போட்டு வேலை பார்த்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் புகையை தொடங்கியுள்ளன. என்ன இப்படி ஆகிட்டாரே நம்பர் நடிகை என சினிமா வட்டாரத்திலேயே பலரும் தங்கள் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனராம்.
ஆனால், சம்பளத்தை தாண்டி நடிகை கேட்கும் பெரும் தொகையை கோலிவுட்டில் உள்ள சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தர முடியாத சூழலில் அவர்களின் படங்களை சோஷியல் மீடியாவில் கூட புரமோட் செய்ய மாட்டேன் என கறாராக நடிகை சொல்லி வருவது பலரையும் பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது என்றும் அந்த வெற்றி நடிகருடன் நம்பர் நடிகை நடித்துள்ள படத்திற்கான புரமோஷனை நடிகை செய்யாததற்கு காரணமே கேட்ட பணத்தை தயாரிப்பு தரப்பு தராதது தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











