அய்யய்யோ கல்யாணமா.. என் மார்க்கெட் சரிஞ்சிடுமே.. பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு!
நடிப்புக்காக திருமணத்தை தள்ளிப்போட முடிவெடுத்துள்ளாராம் நம்பர் நடிகை.
சென்னை: திருமணம் செய்துகொண்டால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாது என்பதால், அதிரடியாக முடிவெடுத்துள்ளாராம் நம்பர் நடிகை.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என ஆல்ரவுண்டராக கலக்கி வருகிறார் நம்பர் நடிகை. ஆனால் சமீபத்திய படங்கள் எதுவும் அவருக்கு வெற்றியை தரவில்லை. பெரிதும் எதிபார்த்த விளையாட்டு படமும் அவருக்கு பெயரை வாங்கித்தரவில்லை.
இதனால் உடனடியாக ஒரு வெற்றிப்படம் தரவேண்டிய கட்டாயத்தில் நடிகை இருக்கிறார்.

நல்ல படங்கள்
எனவே நல்ல கதையம்சம் உள்ள, தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்வதில் முனைப்பு காட்டி வருகிறார் நடிகை. அதனால் தான் காமெடி ஹீரோவாக இருந்தாலும் கூட பரவாயில்லை என புதிய படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்.

திருமணம் செய்யும் ஐடியா
இதுபோக மீண்டும் முன்னணி நடிகர் ஒருவரின் படத்திலும் நடிகை இருப்பதாக ஒரு பேச்சு உலா வருகிறது. இப்படியாக புது படங்களாக ஒப்புக்கொண்டு செல்வதால் நடிகைக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியாவே இல்லை.

மார்க்கெட் சரிந்துவிடும்
திருமணம் செய்துகொண்டால் நிச்சயம் புதிய பட வாய்ப்புகள் கிடைக்காது, தனது மார்க்கெட் சரிந்துவிடும் என நடிகை பயப்படுகிறாராம். இதனாலேயே புலி வருது கதையாக இதோ திருமணம், அதோ திருமணம் சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழித்து வருகிறாராம்.

ஊர் சுற்ற முடிவு
எப்படியும் இந்த ஆண்டு மட்டுமல்ல அடுத்த ஆண்டும் நடிகையின் திருமணம் நடப்பது சந்தேகம் தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். நடிகை கைவசம் உள்ள படங்களை எல்லாம் முடித்து கொடுத்துவிட்டு எப்போது புதிய படங்களே ஒப்புக்கொள்ளவில்லையோ, அப்போது தான் நடிகைக்கு திருமணம் நடைபெறும் என கூறுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அதுவரை ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்க நடிகையும், அவரது காதலரும் முடிவு செய்துள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications











