இன்னும் படத்துல நடிக்கவே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள டார்ச்சர் பண்றாங்களே.. புலம்பும் பூ நடிகை

சென்னை: தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் புக்காகி வரும் அந்த பூ நடிகைக்கு சமீபத்தில் சிலர் ஓவர் டார்ச்சர் கொடுத்துள்ளது அவரை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளதாம்.

பிரம்மாண்ட படங்கள் என்றாலே அந்த பிரபல நடிகையின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்களும் நடிகர்களும் காத்திருக்கின்றனர்.

மாஸ் நடிகருடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில், அவருக்கு புதிய தலைவலி ஒன்று ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டம் இல்லை

அதிர்ஷ்டம் இல்லை

ஆரம்பத்தில் அதிர்ஷ்டமே இல்லாத ஹீரோயின் என திருப்பி அனுப்பப்பட்ட அந்த நடிகை தற்போது கோலிவுட்டுக்கு சூப்பர் கம்பேக் கொடுக்க உள்ளார். எல்லாம் ஓகே ஆன நிலையில், கொரோனா இரண்டாம் அலை லாக்டவுன் காரணமாக அவர் நினைத்தது நடக்க இன்னும் கொஞ்சம் தாமதம் ஆகும் என தெரிகிறது.

மாஸ் நடிகருடன்

மாஸ் நடிகருடன்

கோலிவுட்டில் அறிமுகமான அந்த பூ நடிகை முதல் படம் சொதப்பிய நிலையில், அடுத்தடுத்த படங்கள் கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டார். அந்த நடிகை பல மாநில மொழிகளில் நடித்து தற்போது டாப் ஹீரோயினாக மாஸ் நடிகருக்கு ஜோடி சேர்ந்து மீண்டும் கோலிவுட்டில் காலடி பதிக்க உள்ளார்.

திடீர் சோகம்

திடீர் சோகம்

எல்லாம் திட்டமிட்டபடி நல்லா சென்று கொண்டிருந்த நிலையில், அந்த நடிகைக்கும் அந்த பாழாய் போன கொடிய வைரஸ் நோய் தாக்கியது. மேலும், நோய் தொற்று அதிகரித்துள்ள நிலையில், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் புதிய பட வாய்ப்பு அப்படியே நின்று போயுள்ளதே என அந்த நடிகை சோகத்தில் உள்ளார்.

அன்பு டார்ச்சர்

அன்பு டார்ச்சர்

இந்நிலையில், அந்த நடிகைக்கு சமீபத்தில் ரசிகர்கள் அன்பு டார்ச்சர் கொடுத்துள்ளனர். மாஸ்க் போட்டுக்கிட்டு வெளியே வந்த அவரை துரத்தி துரத்தி போட்டோக்களாக ரசிகர்கள் எடுத்து தள்ளி உள்ளனர். ஆரம்பத்தில் ஒன்று இரண்டு போட்டோக்களுக்கு ஜாலியாக போஸ் கொடுத்த அவர், பிறகு டென்ஷன் ஆகி விட்டார்.

ஆளவிடுங்கடா சாமி

ஆளவிடுங்கடா சாமி

இன்னும் அந்த மாஸ் ஹீரோ உடன் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அதற்குள் அவர்களது ரசிகர்கள் தலைவி என தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்களே என பூரிப்பில் ஆழ்ந்துள்ளார். மேலும், அந்த ரசிகர்களிடம் இருந்து தப்பிக்க தலைக்கு மேல் கை வைத்து கும்பிட்டு ஆளவிடுங்கடா சாமி என அந்த நடிகை ஓட்டம்பிடித்துள்ளார்.

தொடரும் தொல்லை

தொடரும் தொல்லை

மேலும், அந்த ஹீரோ படத்தில் நடித்து முடிப்பதற்குள் இதற்கும் மேல் அதிகமான தொல்லைகளை சந்திக்க நேரிடும் என்றும் அதற்காக எப்போதுமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஏகப்பட்ட முன்னெடுப்புகளை அந்த நடிகை எடுத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X