டாப் நடிகையால் நொந்து நூடுல்ஸாகும் கணவர்...எல்லாத்துக்கும் அதுதான் காரணமா!
சென்னை: டாப் நடிகைகையின் செயலால் கணவர் நொந்து நூடுல்ஸாகி வருகிறார்.
அழகான நடிகையாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவருக்கு தொடக்கமே அமர்க்களமாக இருந்தது. தமிழ் சினிமாவிற்கு வந்த ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களுடன் படங்களில் நடித்தார்.

அடுத்தடுத்து ஹிட்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்த இவரை கோலிவுட் நடிகர்கள் கொண்டாடினார்கள்.
முன்னணி நடிகை: ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகாட்டி நடித்த இந்த நடிகை பின் கவர்ச்சியை ஒதுக்கிவைத்துவிட்டு தனக்கு என்று தனிஇடத்தை பிடித்து, கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். அந்த படங்கள் அனைத்தும் ஹிட்டடித்தன.
மன அழுத்தத்தில் நடிகை: தொடர்ந்து இது போன்ற கதைகளிலேயே நடித்து வந்ததாலும், தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவரை காதலித்து பின் அது பெரிய பஞ்சாயத்தில் முடிந்ததால், அழகு நடிகைக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்பே இல்லாமல் போனது. இதனால், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த நடிகை இருக்கும் இடமே தெரியாமல் போனார்.
விட்ட இடத்தை பிடித்தார்: இதையடுத்து அக்கட தேசம் போய், காதலனை நினைத்து அழுது தீர்த்த நடிகை, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார். இதையடுத்து, பிரபலம் இல்லாத இயக்குநர் ஒருவரிடம் கதை கேட்டு அந்த கதையில் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானதால், அந்த டாப் நடிகை மீண்டும் கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடித்தார்.
கண்டிஷன் போட்டு திருமணம்: அடுத்தடுத்த காதல் தோல்வியால் மன அழுத்தத்தில் இருந்த டாப் நடிகைக்கு, அந்த பிரபலமில்லாதவர் மீது காதல் வர, அடுக்கடுக்கான பல கண்டிஷன்களை போட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் பிரபலம் இல்லாத அந்த இயக்குநர் டாப் நடிகர் ஒருவரின் படத்தில் கமிட்டானார். ஆனால், என்ன பிரச்சனையோ தெரியவில்லை டாப் நடிகர் பிரபலம் இல்லாத இயக்குநரை புறக்கணித்துவிட்டார்.
பயத்தில் கணவர்: டாப் நடிகையோ பிஸியாக நடித்து வரும் நேரத்தில், டாப் நடிகையின் கணவரோ பிள்ளைக்குட்டிகளை கவனித்துக்கொண்டு, நடிகைக்கு கூஜா தூக்கி வருகிறார். இப்படியே நிலைமை போனால், மொத்தமாக காணாமலே போய்விடுவோம் என்ற பயத்தில் அந்த பிரபலம் இல்லாத இயக்குநர் புலம்பி வருவதாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











