ஒருத்தரும் பார்க்கல.. ஓடிடியில் வெளியாகியும் ரெஸ்பான்ஸே இல்லையாம்.. ஃபீலிங்கில் புதுப்பொண்ணு!
சென்னை: புசுபுசு நடிகையின் புதிய வீடியோ ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில், எல்லா ரசிகர்களையும் அதை பார்த்து பாராட்டுவார்கள் என ரொம்பவே ஆசை ஆசையாக இருந்தாராம்.
ஆனால், கடைசியில் அந்த பக்கமே யாரும் தலையை வைத்துக் கூட படுக்கவில்லை என்கிற தகவல்கள் ஓடிடி நிர்வாகத்திடம் இருந்து வந்த நிலையில், கடும் அப்செட் ஆகி உள்ளாராம்.
பல கோடிக்கு பிசினஸ் பேசிய நிலையில், பர்ஃபார்மன்ஸ் சரியில்லை என கொடுத்த அட்வான்ஸ் பணத்துடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம் என சொல்லி இருப்பது தான் நடிகையை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்.

உஷாரான ஓடிடி
உருப்படாத படங்களை ஓடிடி நிறுவனங்களிடம் தள்ளி காசு பார்க்க நினைத்த நடிகர்களுக்கு சமீப காலமாக ஓடிடி நிறுவனங்கள் தொடர்ந்து செக் வைத்து வருகிறது. முதலில் குறைந்த அளவிலான பணத்தை மட்டுமே கொடுப்போம் என்றூம் படம் அதிக பார்வையாளர்களை கவர்ந்தால் தான் முழு பணமும் கிடைக்கும் என கண்டிஷன் போட்டே புது படங்கள் தொடங்கி, வெப்சீரிஸ் என அனைத்து வீடியோக்களையும் வாங்குறாங்களாம்.

நம்பர் நடிகையின் நிலைமை
இதுபோன்ற புதிய மாற்றத்தால் தான் அந்த நம்பர் நடிகையின் திருமண வீடியோ இன்னமும் வெளியாகாமல் சிக்கித் தவித்து வருவதாக கூறுகின்றனர். ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு நடந்த திருமணத்தை மறைத்து புதியதாக திருமணம் செய்து கொண்டனர் என்கிற தகவல் பரவிய நிலையில், இனிமேல் யாரும் அதை பார்க்க மாட்டார்கள் என நிறுவனம் தொகையை குறைத்தது தான் அந்த வீடியோ வெளியாகாமல் கிடப்பில் கிடக்க காரணம் என்கின்றனர்.

முந்திக் கொண்டு
அந்த நடிகையின் திருமண வீடியோ வெளியே வருவதற்கு முன்னதாக நம் வீடியோ முதலில் வெளியாக வேண்டும் என புசுபுசு நடிகை முந்திக் கொண்டு வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் சுத்தமாக வரவேற்பு இல்லாமல் போனது தான் நடிகையை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இரண்டு முறை
நடிகைக்கும் எக்ஸ் லவ்வர் உள்ளிட்ட விஷயங்கள் இருக்க, நடிகையின் கணவருக்கு எக்ஸ் மனைவியே இருக்க இரண்டு முறை திருமணமானவரின் வீடியோவை பார்த்து என்ன செய்ய என ரசிகர்கள் சுத்தமாக நடிகையின் டிராமாவை கண்டுக் கொள்ளவே இல்லையாம்.

கடுப்பான நிறுவனம்
ஏகப்பட்ட பில்டப்புகளை பேசி பெரிய அளவில் இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நடிகை பேசியதை நம்பி வெளியிட்ட அந்த வீடியோவுக்கு இப்படியொரு மோசமான ரெஸ்பான்ஸ் காரணமாக கடுப்பாகி சொன்ன காசு கொடுக்க முடியாது என்றும் ஏற்கனவே கொடுத்ததே ஜாஸ்தி என அதிரடியாக சொல்ல நடிகை ஆடிப் போயுள்ளதாக கூறுகின்றனர்.

எல்லாமே வெளியாகிடுச்சு
நடிகையின் அனைத்து போட்டோக்களும், வீடியோக்களும் ஏற்கனவே சமூக வலைதளத்தில் வெளியான நிலையில், அதை பார்த்து விட்டே இவ்வளவு தானா என்றும் இவர் தான் மாப்பிள்ளையா என நினைத்த ரசிகர்கள் ஓடிடியில் வெளியான வீடியோவை பார்க்க ஆர்வமே காட்டவில்லை என்கின்றனர். ஏற்கனவே அந்த ஓடிடி நிறுவனம் நஷ்டத்தில் சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், பல ஆயிரம் பேரை தூக்கி வருகின்றனர். இந்நிலையில், நடிகையின் வீடியோவும் சொதப்பிய நிலையில், ரொம்பவே நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.

படமே ஓடல
சமீப காலமாக அந்த நடிகை நடிக்கும் படங்களே ஓடுவதில்லை. இதில், ஆவணப்படம் மட்டும் ஓடுமா என்ன என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். ஏகப்பட்ட பழசை எல்லாம் பேசி சர்ச்சை விஷயங்களை வைத்து ஹிட் அடித்து விடலாம் என மனக்கோட்டை கட்டிய நடிகைக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











