சினிமாவுக்கு குட் பை.. சீக்கிரமே புதிய அவதாரம்.. அதுக்குத்தான் அமைதியோ அமைதியா இருக்காரா அந்த நடிகை?
சென்னை: பல வருடங்கள் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை இதுக்குமேல சினிமாவில் நடிக்க வேண்டாம் என்கிற முடிவுக்கே வந்துவிட்டார் எனக் கூறுகின்றனர். மேலும், சீக்கிரமே அவர் புது அவதாரம் எடுக்கப் போவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
அந்த காலத்து நடிகைகள் எல்லாம் சினிமாவில் மார்க்கெட் குறைந்தால், உடனடியாக மீண்டும் சம்பாதிக்க சின்னத்திரையில் அதிரடி என்ட்ரி கொடுப்பார்கள். அதன் பின்னர், அக்கா வேடங்களிலும், ஜோடியாக நடித்த நடிகருக்கு அம்மாவாகவோ, மாமியாராக கூட நடிப்பார்கள்.

ஆனால், சில நடிகைகளுக்கு இதெல்லாம் செட்டே ஆகாது. நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த பின்னர், சீரியல் நடிகை என டவுன் ஆகி விடக் கூடாது. சும்மா கூட ரெஸ்ட் எடுக்கலாமே தவிர, இறங்கிப் போய் விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். இந்த பிரபல நடிகையும் அதே முடிவுக்குத்தான் வந்துவிட்டார் என்கின்றனர்.
நடிகருடன் கிசுகிசு: அந்த டாப் நடிகை தொடர்ந்து முன்னணி ஹீரோ ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இருவருக்கும் சீக்கிரமே திருமணம் நடைபெறப் போவதாகவும், இருவரும் ஒரே மதம் என்பதால் இருவரும் ரகசியமாக நிச்சயம் செய்துக் கொண்டதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. அதன் காரணமாகவே சமீப காலமாக புதிய படங்களில் நடிகை ஒப்பந்தம் ஆகவில்லை என்கின்றனர்.

சினிமாவுக்கு குட் பை: பல வருடங்களாக நடித்து வரும் நடிகைகளுக்கு சினிமா வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. ஆனால், இந்த வயதிலும் அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் அதிகமாகவே வந்துக் கொண்டிருந்தாலும், அவரே சமீப காலமாக தனக்கு கதை சொல்ல வரும் இயக்குநர்களையும் தேதி கேட்கும் தயாரிப்பாளர்களையும் சந்திப்பதை தவிர்த்து வருகிறாராம்.
புது அவதாரம்: சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு சீக்கிரமே ஓய்வெடுக்கப் போகிறாரா நடிகை என எதிர்பார்த்தால், அதுதான் கிடையாதாம். சீக்கிரமே புது அவதாரம் ஒன்றையும் நடிகை எடுக்கப் போகிறார் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. நடிகையின் புது அவதாரத்தை ரசிகர்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள், அவருக்கு சினிமாவில் கிடைத்ததை போலவே வரவேற்பு கிடைக்குமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











