ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய கோலிவுட் டாப் ஹீரோக்கள்.. ஒரேயடியாக சினிமாவை விட்டு விலகுகிறாரா நம்பர் நடிகை?

By Staff

சென்னை: புதிதாக யாராவது அணுகி கதை சொல்ல வந்தால், உடனடியாக எண்ட் கார்டு போட்டு நோ சொல்லி வருகிறாராம் அந்த நம்பர் நடிகை.

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்த காலம் எல்லாம் மலை ஏறி விட்டாலும், இன்னமும் அந்த பட்டத்தை சுமந்து கொண்டு வலம் வருகிறார்.

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய நிலையில், பக்கத்து ஸ்டேட் நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

திருமணம் ஆகி விட்டாலே

திருமணம் ஆகி விட்டாலே

திறமைக்கு இருக்கோ இல்லையோ திருமணம் ஆகி விட்டாலே டாப் ஹீரோக்களுக்கு அதன் பிறகு எந்தவொரு நடிகைகளும் ஜோடி சேர முடியாது என்கிற எழுதப்படாத விதி தமிழ் சினிமாவில் அதிகமாகவே உள்ளது. தற்போது நம்பர் நடிகையும் அந்த சிக்கலை பெரிதளவில் சந்தித்து வருகிறார்.

அவரா வேண்டாம்

அவரா வேண்டாம்

பாலிவுட் நடிகைகளை ஹீரோயின்களாக கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் தொடர்ந்து இறக்கி வருகின்றனர். ஆனால், இங்குள்ள நடிகை முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க நடந்த முயற்சிகள் எல்லாம் வீணாய் போய் விட்டதாகவும், அந்த நடிகை எல்லாம் இப்போ ஹீரோயினாக போட்டால் பார்க்க மாட்டாங்க என ஒட்டுமொத்தமாகவே ஒதுக்கி விட்டார்களாம்.

டாப் நடிகரும் நோ சொல்லிட்டாரு

டாப் நடிகரும் நோ சொல்லிட்டாரு

எப்படியாவது டாப் நடிகர் படத்திலாவது நடித்து விடலாம் என எதிர்பார்த்து கணவருக்கு அந்த படத்தை இயக்கும் வாய்ப்புகளை எல்லாம் இறங்கி வேலை செய்து வாங்கிக் கொடுத்த நடிகைக்கே கடைசியாக ஹீரோயின் சான்ஸ் இல்லைன்னு சொல்லி விட்டதாக பரபரப்பு தகவல்கள் எல்லாம் பறந்து வருகின்றன.

நடிகை ரொம்பவே அப்செட்

நடிகை ரொம்பவே அப்செட்

உள்ளூரில் தனது சாம்ராஜ்யம் ஒட்டுமொத்தமாக சரிந்து விட்டதை அறிந்த நடிகை பக்கத்து ஸ்டேட் டாப் ஹீரோக்களுக்கு தாராளமாக கால்ஷீட் ஒதுக்கி நடித்து வருகிறார். ஆனால், அதுவும் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பது தெரியாத நிலையில், தாமாகவே டீசன்ட்டாக இல்லற வாழ்க்கையை சாக்காக வைத்து ஒதுங்கி விடலாம் என்கிற முடிவுக்கே வந்து விட்டாராம்.

அந்த படம் டிராப்பா

அந்த படம் டிராப்பா

நடிகையை வைத்து பிரம்மாண்டத்தின் சீடன் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட அந்த படமும் அப்படியே டிராப் ஆகிறது என்கிற பேச்சுக்கள் பரபரப்பாக அடிபடத் தொடங்கி உள்ளன. மேலும், நடிகையை வைத்து ஹாரர் படம் எடுக்கலாம், ஹீரோயின் சென்ட்ரிக் படம் எடுக்கலாம் என கிளம்பி வந்த இயக்குநர்களிடம் கதையை கூட கேட்காமல் திருப்பி அனுப்பி வைத்து வருவதாகவும் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

விருப்பமில்லா ஓய்வு

விருப்பமில்லா ஓய்வு

கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு ஒட்டுமொத்தமாக சினிமாவில் இருந்து நடிகை விலகி ரெஸ்ட் எடுக்கப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் பேசத் தொடங்கி உள்ளன. ஆனால், இது விருப்ப ஓய்வு இல்லை என்றும் விருப்பமே இல்லாமல் வேறு வழியின்றி நடிகை எடுக்கப் போகும் ஓய்வு என்றும் கூறுகின்றனர்.

பாலிவுட்டில் செட்டில்

பாலிவுட்டில் செட்டில்

பாலிவுட் படம் ஒரு வேளை மிகப்பெரிய வெற்றியை கொடுத்தால், அங்கே பெரிய பட வாய்ப்புகள் வந்தால், மட்டும் நடிக்கலாம் என்கிற பிளான் உடன் நடிகை இருப்பதாகவும் கூறுகின்றனர். விரைவில் நடிகை தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போடப்போறாரா அல்லது தொடர்ந்து நடிப்பாரா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X