சினிமாவை விட்டே விலக போகிறாரா அந்த மூன்றெழுத்து நடிகை.. எல்லாத்துக்கும் அதுதான் காரணமா?
சென்னை: பல வருடங்களாக சினிமாவில் நடித்து தனக்கென தனி இடத்தையே பிடித்து வைத்திருக்கிறார் அந்த மூன்றெழுத்து நடிகை. இன்னமும் திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக நடிகை இருந்தாலும் அவர் குறித்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் தொடர்ந்து வலம் வந்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், ரசிகர்களை ஷாக் ஆக்கும் விதமாக நடிகை சினிமாவை விட்டே விலகப் போவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகைகள் என்றாலே அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தான் பீக் இருக்கும் என்றெல்லாம் ஆரம்பத்தில் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கேற்ப பல நடிகைகள் சில வருடங்களிலேயே கல்யாணம் பண்ணிக் கொண்டு சினிமாவை விட்டே காணாமல் போயுள்ளனர்.

ஆனால், அவர்களுக்கு எல்லாம் முன்னதாக சினிமாவில் கால்தடம் பதித்த அந்த மூன்றெழுத்து நடிகை இன்னமும் டாப் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், திடீரென சினிமாவை விட்டே விலகப் போவதாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
நம்பர் நடிகைக்கு வாய்ப்பில்லை: நம்பர் நடிகைக்கு கோலிவுட்டில் ஏற்கனவே அனைத்தும் பெரிய கதவுகளும் மூடப்பட்டு விட்டன. இளம் நடிகைகளைத் தான் ரசிகர்கள் விரும்புகின்றனர் என்றும் நீங்க வேண்டாம் என்றும் ஒதுக்கிவிட்டு அந்த மூன்றெழுத்து நடிகைக்கு மட்டும் திடீரென பட வாய்ப்புகளை நடிகர்கள் அதிகம் கொடுத்து வருவது நம்பர் நடிகையை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்த காரணமாக அமைந்துவிட்டது.
உடல்நலக்குறைவு: பேபி நடிகைக்கும் உடல்நலக்குறைவு காரணமாக பட வாய்ப்புகள் ஒட்டுமொத்தமாக நின்றுவிட்டது. அவர் நடிக்க நினைத்தாலும், அவரை கமிட் செய்ய கோலிவுட் முதல் பாலிவுட் வரை யாருமே தயாராக இல்லை என்கின்றனர். அதே நிலைமை தான் அந்த அவார்டு நடிகைக்கும் ஏற்பட்டு வந்த நிலையில், அவர் உஷாராக திருமணம் செய்துக் கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்க முடிவு செய்துவிட்டார் என்கின்றனர்.
மூன்றெழுத்து நடிகையின் திடீர் முடிவு: ஆனால், மற்ற நடிகைகள் போல சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் இல்லையாம் இந்த நடிகைக்கு. இன்னமும் 10க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் டேட் கேட்டு நடிகையின் வீட்டு வாசலில் காத்துக்கிடக்க திடீரென சினிமாவை விட்டே விலக நடிகை முடிவு செய்துள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. மாஸ் நடிகருடன் நடிகையை தொடர்புபடுத்தி ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளியாகி வந்த போதே அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் குறைந்துவிட்டது என்கின்றனர். இந்நிலையில், தனிப்பட்ட இழப்பு காரணமாக ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். ஒப்பந்தமான படங்களை மட்டும் முடித்துவிட்டு ஓய்வை அறிவிக்கப் போவதாக கூறுகின்றனர். ஆனால், நடிகையின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நெருங்கிய நண்பர்கள் பேசி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











