Don't Miss!
- News
ட்ரோன் இயந்திரங்களால் கொசு ஒழிப்பு! சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ள புதிய முயற்சி!
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Sports
ஹர்திக் பாண்ட்யாவின் பேராசை? கேப்டன்சியை தவறாக பயன்படுத்தியதால் இந்தியா தோல்வியா.. குவியும் புகார்!
- Technology
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
எழுந்து நிற்க கூட முடியல.. வெளியே தெரிஞ்சா மொத்தமா போயிடும்.. சீக்ரெட்டாக சிகிச்சை எடுக்கும் நடிகை!
சென்னை: க்யூட்டாகவும் போல்டாகவும் நடித்து டோட்டல் சவுத் இந்தியா ரசிகர்களையே தன் வசம் ஈர்த்த அந்த பிரபல நடிகைக்கு திடீரென வந்த பிரச்சனை பலருக்கும் பெரிய ஷாக்கை கொடுத்தது.
உடல் நலம் சரியில்லை என்றாலும், தான் நடித்த படங்களின் பணிகளை ரொம்பவே சிரமப்பட்டு நடிகை செய்து வருகிறார்.
தனது உடல்நலக் குறைவையே ப்ரொமோஷன் மெட்டீரியலாக பயன்படுத்தி சமீபத்தில் வெளியான படத்தை ஓடவும் வைத்து விட்டார்.
Bigg Boss Tamil 6: ஓப்பன் நாமினேஷன் என்றதும் பூசி மெழுகிட்டீங்களா.. ஹவுஸ்மேட்ஸை விளாசிய கமல்!

பெரிய நம்பிக்கை
குடும்பத்தில் விதிக்கப்பட்ட கண்டிஷன்கள் எல்லாம் பிடிக்காமல் சிறகை விரித்து பறக்க ஆசைப்பட்ட அந்த பிரபல நடிகை காதல் கணவரே வேண்டாம் என்று தூக்கி எறிந்து பெரிய நம்பிக்கையுடன் தனியாக வாழ அடியெடுத்து வைத்தார். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே அவரது நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்து விழும் அளவுக்கு அவருக்கே அப்படியொரு பெரிய பிரச்சனை ஏற்பட்டு விட்டது.

எழுந்து நிற்க கூட முடியல
குத்தாட்டம், குடியாட்டம் என போட்டு வந்த அந்த நடிகை உடல் எடையை குறைக்கிறேன் என்கிற பெயரில் கடுமையாக ஒர்க்கவுட் செய்வது, பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அதற்கெல்லாம் அவரது பாடி தாங்காமல் இப்போ எழுந்து நிற்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.

சீக்ரெட்டாக சிகிச்சை
தனது நிலைமை வெளியே தெரிந்து விட்டால் கொஞ்ச நஞ்ச இருக்க மார்க்கெட் கூட முழுதாக பறிபோய் விடும் என்பதால் தான் நன்றாகவே இருப்பதாகவும் அட்மிட் ஆன விஷயம் எல்லாம் சும்மா வதந்தி என்றும் மறுத்து வருகிறார். ஆனால், உண்மையில் அவர் தனது கொடிய நோய்க்காக சீக்ரெட்டாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் முன்பை விட நிலைமை ரொம்பவே கவலைக்கிடமாக மாறி விட்டதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் காத்துவாக்குல ரகசியங்களை கட்டவிழ்த்து வருகின்றன.

பணம் போட்டவர்களுக்கு சிக்கல்
இந்த நடிகையை நம்பி அட்வான்ஸ் கொடுத்த சில தயாரிப்பாளர்கள் தற்போது நடிகையின் நிலைமை பார்த்து பணத்தை திருப்பிக் கூட கேட்க முடியாத சூழலில் உள்ளதாக கூறுகின்றனர். புதிதாக அந்த நடிகையை வைத்து எந்த படமும் கமிட் செய்ய வேண்டாம் என்றும் வேறு நடிகைகளை பாருங்கள் என டாப் ஹீரோக்களே சிக்னல் கொடுத்ததால் இயக்குநர்களும் மற்ற நடிகைகளுக்கு ஏற்றார் போல கதாபாத்திரங்களை மாற்றி வருவதாகவும் கூறுகின்றனர்.

கண்டுக்காத கணவர்
மனைவியின் நிலை அறிந்து இந்த சூழலில் ஆவது அவருக்கு உதவலாம் என கருணையோடு பேசிய கணவரையும் பிரிவு காரணமாக உதாசினப்படுத்தி உள்ளாராம் அந்த நடிகை. அதன் காரணமாக, இனிமேல் அவரை கெஞ்சி எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் தனது தனி ரூட்டை இனி பார்த்துக் கொள்ளலாம் என நடிகரும் இவரை சுத்தமாக தற்போது கண்டு கொள்வதே இல்லையாம்.

மூன்றெழுத்து நடிகை முன்னேற்றம்
பிரபல நடிகையின் பின்னடைவு மூன்றெழுத்து நடிகைக்கு முன்னேற்றமாக மாறியுள்ளது. மாஸ் நடிகரின் அந்த பெரிய படம் மட்டும் இல்லாமல் இந்த நடிகையை கமிட் செய்த சில பக்கத்து ஸ்டேட் பட வாய்ப்புகளும் தானாக மூன்றெழுத்து நடிகையை தேடி வந்துள்ளதாக கூறுகின்றனர்.