அந்த விஷயத்தை மட்டும் கேட்டா ஹீரோயின் அப்செட் ஆயிடறாராம்... என்ன பஞ்சாயத்துன்னு தெரியலையே?
சென்னை: அந்த முன்னணி ஹீரோயினிடம் அந்த விஷயத்தை மட்டும் கேட்டால், அப்செட் ஆகிவிடுவதாகச் சொல்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் கொடிகட்டிப் பறக்கும் ஹீரோயின் அவர். தமிழில்தான் அறிமுகமானார். இப்போது தெலுங்கிலும் அவர் கொடி பறக்கிறது.
அங்குள்ள ஹீரோவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை, தான் உண்டு தன் நடிப்பு உண்டு என்றிருக்கிறார்.

என்ன காரணம்
இதற்கிடையே நடிகை தமிழில் ஹிட்டான வருட படத்தின் ரீமேக்கில் நடித்தார். அந்தப் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால், என்ன சிக்கலோ, படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தமிழில் ஒர்க் அவுட் ஆன காதல், அங்கு வொர்க் அவுட் ஆகாததற்கு என்ன காரணம் என்று நடிகை யோசித்து வருகிறார்.

நீக்கி விட்டார்கள்
அந்த லவ் படம் தோல்வி அடைந்ததால், கமிட் ஆன படம் ஒன்றில் இருந்தும் நடிகையை நீக்கி விட்டார்கள். இவருக்குப் பதிலாக வேறு ஒரு ஹீரோயின் நடிக்கிறார். இதனால் எரிச்சலில் இருக்கும் அவர், தமிழில் நம்பர் நடிகையுடன் ஒரு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை நம்பர் நடிகையின் காதலன் இயக்குகிறார்.

ஏகப்பட்ட வதந்திகள்
இதற்கிடையே, கணவருடன் பஞ்சாயத்து, அவரை பிரிய போகிறார் என்று ஏகப்பட்ட
வதந்திகள். இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க நடிகைக்கு விருப்பம் இல்லை.
இந்தப் பிரச்னைகளுக்கு இடையிலும் நடிகை பல நல்ல காரியங்களை செய்து வருகிறார். அறக்கட்டளை மூலம் சத்தம் போடாமல் உதவி வருகிறார்.

ஹேப்பியா ஆகறீங்களே
சமீபத்தில் குழந்தைகளுக்கான மையம் ஒன்றைத் திறந்திருக்கிறார். இதன் விழாவில் ஓவர் மகிழ்ச்சியாக இருந்தார் நடிகை. அதில் ஒருவர், இவ்வளவு குழந்தைகளை பார்த்ததும் ஹேப்பியா ஆகறீங்களே... நீங்க எப்ப குழந்தைப் பெத்துக்க போறீங்க?' என்று கேட்டாராம். மொத்த சந்தோஷமும் டொப்பென்று இறங்கிவிட்டதாம் நடிகைக்கு. மூட் அவுட்டில் பேசாமல், கிளம்பிவிட்டார் என்கிறார்கள்.

அப்படி சொல்லலை
நடிகையோட பர்சனல் விஷயங்களை ஏன் கேட்கிறாங்க? என்று கடுப்பாகிறார்கள், நடிகைக்கு வேண்டியவர்கள். நடிகை, ஏற்கனவே இன்னும் 3 வருடங்களோடு சினிமாவில் இருந்து விடைபெறுவேன் என்றும் எனது குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பிறகு அதை நான் அப்படி சொல்லலை என்று மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











