எல்லாமே ராங்கா போகுதே.. பெருமூச்சு விடும் மூன்றெழுத்து நடிகை.. எப்போ தான் அந்த பிரச்சனை தீருமோ?

By Staff

சென்னை: மூன்றெழுத்து பெயர் கொண்ட தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையின் ஆக்‌ஷன் படம் ஷூட்டிங் எல்லாம் எப்பவோ முடிந்த நிலையில், இன்னமும் ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்துக் கொண்டே போகிறது.

நம்பர் நடிகை ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வரும் நிலையில், நாமும் சோலோவாக நடித்து சாதிக்க வேண்டும் என நினைத்த மூன்றெழுத்து நடிகைக்கு அவர் அப்படி நடித்த எந்த படமும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

இந்நிலையில், அந்த ஆக்ஸிடன்ட் படத்தை இயக்கிய இயக்குநருடன் சேர்ந்து ஒரு பக்காவான ஆக்‌ஷன் படத்தில் நடித்து வந்தார் நடிகை.

நல்ல கதை

நல்ல கதை

நம்ம ஊர் நோலன் இயக்குநர் தான் அந்த படத்திற்கு கதை எழுதி இருந்தார். படத்தின் கதை பிடித்துப் போகவே நடிக்க சம்மதித்து கால்ஷீட்டை எல்லாம் வாரிக் கொடுத்தார் நடிகை. எப்படியும் இந்த படம் நமக்கு பேரை வாங்கிக் கொடுக்கும் என ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் எல்லாம் மிரட்டி எடுத்ததாக தகவல்களும் பரப்பப்பட்டன.

ரொம்ப லேட்

ரொம்ப லேட்

வழக்கம் போல நடிகை நடிக்கும் படங்கள் எல்லாம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் லேட் ரிலீஸ் ஆகி வருவதை போலவே இந்த படமும் பல நூற்றாண்டாக பெட்டிக்குள்ளே அடைந்து கிடக்கிறது.. எப்போது தான் திரைக்கு அந்த படத்தை தூசித் தட்டி எடுத்து வருவார்கள் நாமும் ஆக்‌ஷன் ஸ்டார் ஆகலாம் என நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் நடக்காமலே போனதால் நடிகை ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம்.

காவிய படைப்பு

காவிய படைப்பு

ஆனால், அதே தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் அந்த காவிய படைப்பின் ரிலீஸ் கன்ஃபார்ம் ஆகி உள்ளதால் சற்றே நடிகை ஆறுதல் அடைந்திருப்பதாகவும், ஆனால், இந்த படத்தில் தன்னை விட அந்த அழகு நடிகைக்குத் தானே மொத்த ஸ்கோப்பும் இருக்கு என்பதால், ஆக்‌ஷன் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தையில் இறங்கி உள்ளாராம்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

வழக்கம் போல இந்த படம் இப்படி ரிலீஸ் செய்யப்படாமல் கடந்த சில வருடங்களாக இழுத்தடிக்க காரணமே இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ கிளாஷ் தான் என்கின்றனர். தயாரிப்பாளரை பழிவாங்க நினைத்து இயக்குநர் இஷ்டத்துக்கு செலவை இழுத்து விட்டதால் தான் இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை என்கின்றனர்.

சுமூக பேச்சுவார்த்தை

சுமூக பேச்சுவார்த்தை

இயக்குநருக்காக தற்போது நடிகை சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அந்த பெரிய படம் வெளியானதும் ஒரு சில மாதங்களில் நடிகையின் ஆக்‌ஷன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தனது புதிய படங்கள் மீதும் அதீத கவனத்தை செலுத்தி வருகிறாராம் அந்த நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X