காதலர் போட்ட போன் கால்.. கம்பி நீட்டிய லேடி லெக் தாதா.. கடுப்பான மாஸ் நடிகர்.. என்ன ஆச்சு?
ஹைதராபாத்: பக்கத்து ஸ்டேட் மாஸ் நடிகர் படத்தில் இருந்து லேடி லெக் தாதா கம்பி நீட்ட காரணமே அவரது காதலர் தான் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த நடிகை நடிப்பில் வெளியான ஒரு சில படங்களை தவிர அனைத்து படங்களும் அட்டு ஃபிளாப் ஆகி உள்ளது.
ஆனாலும், நடிகையின் அழகில் மயங்கி ஒவ்வொரு ஹீரோவும் நடிகையை தொடர்ந்து ஹீரோயினாக புக் செய்து வருகின்றனர்.

அழகில் மயங்கி: ஹீரோயினுக்கும் படத்தின் தோல்விக்கும் சம்மந்தம் இருக்கு என சிலர் கருதினாலும், அதற்கு அவர் என்ன பண்ணுவார் பாவம் என நடிகைக்கு அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் பட வாய்ப்புகளை தாராளமாக அள்ளிக் கொடுக்க காரணமே அவரது அழகில் மயங்கி விழுவது தான் என்கின்றனர்.
மேலும், சினிமாவில் தொடர்ந்து மற்ற நடிகைகளை விட காட்டுத்தனமாக கவர்ச்சியை காட்டி அந்த லேடி லெக் தாதா நடித்து வருவதால் ஹீரோக்களின் ஃபேவரைட் ஹீரோயினாகவே அவர் வலம் வருகிறார். அப்படித்தான் அந்த பக்கத்து ஸ்டேட் மாஸ் நடிகரும் நடிகையை இத்தனை தோல்விக்கு பிறகும் போனா போகுதேன்னு தனது படத்தில் கமிட் செய்திருந்தார்.

இன்னொரு நடிகைக்கு முக்கியத்துவம்: ஆனாலும், இந்த ஒரு ஹீரோயின் மட்டும் இருந்தால் படம் சரியாக ஓடுமா ஓடாதா என்கிற பயத்தின் காரணமாக இயக்குநர் இன்னொரு இளம் ஹீரோயினையும் அந்த படத்தில் கமிட் செய்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் அத்தனை பேரின் கவனத்தையும் லேடி லெக் தாதா கவர்வதற்கு பதிலாக அந்த யங் குயின் கவர்ந்து கலக்கி வருகிறாராம். இதனால் ஒரு பக்கம் அப்செட் ஆகி இருந்த அந்த லேடி லெக் தாதா இதுபற்றி தனது காதலரிடம் சொல்லி புலம்பி உள்ளாராம்.
கிளம்பி வந்துடு: காதலியின் புலம்பலை கருத்தில் கொண்டிருந்த அவரது காதலரும் அந்த டாப் ஹீரோவும் இப்போதைக்கு அடுத்த படத்தில் இவர் ஹீரோயின் இல்லையே என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது அதிரடியாக ஹீரோயினையே இவருக்காக மாற்றி விட்டாராம்.
அதன் காரணமாக போன் செய்து உடனடியாக கிளம்பி வந்து விடு நான் பார்த்துக் கொள்கிறேன் என அந்த டாப் நடிகர் சொன்ன காரணத்தினால் தான் இந்த லேடி லெக் தாதா மாஸ் நடிகருக்கு அல்வா கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார் என்கின்றனர். கூடிய சீக்கிரமே நடிகரின் படத்தில் லேடி லெக் தாதா ஆன்போர்ட் என்கிற அறிவிப்பு வரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











