நடிகையின் திருமணத்தை நிறுத்த பிளான்.. எக்குத்தப்பாக பற்ற வைத்த எக்ஸ்.. தலையில் தட்டி துரத்திவிட்ட நடிகர்
சென்னை: இந்திய அளவில் ஃபேமஸான இருக்கும் நடிகைக்கும், நடிகருக்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்தத் திருமணம்தான் இப்போது அனைவரது கவனத்துக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. நாள்தோறும் அதுகுறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்திவருகிறது. இந்நிலையில் இந்தத் திருமணத்தில் குழப்பத்தை விளைவிக்க அம்மணியின் எக்ஸ் முயன்றதாக ஒரு கிசுகிசு ஓட ஆரம்பித்திருக்கிறது.
காவிரி தேசத்தை சேர்ந்தவர் அந்த நடிகை. திரைத்துறைக்குள் அவர் வந்த புதிதில் பெரிய வரவேற்பை எல்லாம் பெறவில்லை. நடிக்கிறேன், க்யூட்டாக எக்ஸ்பிரஷன் கொடுக்கிறேன் என்கிற பெயரில் என்னனென்னமோ செய்கிறார்; அதன் காரணமாக விரைவில் காணாமல் போய்விடுவார் என்றெல்லாம் பலரும் பேசினார்கள். அதற்கேற்றபடி அம்மணி நடித்த சில படங்களும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தன. அதை வைத்து நடிகையின் கரியருக்கு பெரும்பாலானோர் முடிவுரையும் எழுத தொடங்கினார்கள்.

நடிகையின் அசுர வளர்ச்சி: இதையெல்லாம் சீரியஸாக கவனித்து வந்த நடிகை தனது திறமையை படிப்படியாக வளர்த்தார். அதன் பலனாக அவரது நடிப்பு மெருகேறியது. படங்களும் தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. எனவே அவருக்கென்று ரசிகர் கூட்டமும் பலமானது. நடிகையும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் ஒருவரோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். மிக தீவிரமாக இரண்டு பேரும் காதலித்தார்கள்.
முறிந்த காதல்: அவர்கள் காதலித்தபோது இப்படி ஒருவரை எங்கேயும் பார்த்ததில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் புகழ்ந்துகொண்டிருந்தார். ஆனால் சில வருடங்கள் கழித்துதான் அந்த நடிகரின் உண்மையான குணம் அம்மணிக்கு தெரிய வந்தது. இதனால் உடனடியாக அந்த ரிலேஷன்ஷிப்பிலிருந்து வெளியே வந்தார். அவர் வெளியே வந்துவிட்டாலும் அந்தக் காதல் தோல்வியிலிருந்து வெளியே வர முடியவில்லை. அப்போது இன்னொரு நடிகர் வந்து நடிகைக்கு உறுதுணையாக இருந்தார்.
நடிகருடன் திருமணம்: தனக்காக இப்படி இருக்கிறாரே என்று உருகிய நடிகை; அந்த நடிகரை காதலிக்க ஆரம்பித்தார். இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் உடனடியாக சம்மதம் கிடைத்துவிட்டது. அதனையடுத்து திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறார்கள். இந்தத் திருமணம் பற்றிய பேச்சுதான் சோஷியல் மீடியா எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்த தொடங்கியிருக்கிறார்கள்.
குறுக்கே இந்த கௌஷிக் வந்தால்?: நிலைமை இப்படி இருக்க நடிகைக்கு திருமணம் நடக்கவிருப்பதை அவரது முன்னாள் காதலரால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். தன்னிடமிருந்து விலகிய அவர் எங்கேயும், எப்படியும் நிம்மதியாக இருக்க கூடாது என பல வேலைகளை செய்ய தொடங்கினாராம். அதன்படி இப்போதைய நடிகரின் காதலருக்கு ஃபோன் செய்து, 'அவளை திருமணம் செய்துகொண்டால் உங்களால் நிம்மதியாகவே இருக்க முடியாது. நிலையில்லாத மனதை கொண்டிருக்கும் அவள் கண்டிப்பாக உங்களையும் பாதியிலேயே விட்டுவிட்டு போய்விடுவாள்' என்றெல்லாம் போட்டுக்கொடுத்தாராம். ஆனால் இதையெல்லாம் துளியும் நம்பாத இந்நாள் காதலர், 'உன்னை விட அவளை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இந்த மூனு சீட்டு வேலையெல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதே. நேரில் மட்டும் சிக்கினால் உன்னை தொலைத்துவிடுவேன்' என அட்டாக் மோடில் பேச; முன்னாள் காதலர் அலறியடித்து ஃபோனை துண்டித்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications















