பழைய மார்க்கெட் போனதால் அப்செட்.. முன்னணி ஹீரோக்களை மடக்க பிளான் பண்ணும் நடிகை!

சென்னை: கோலிவுட்டில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பிரபல நடிகை பக்கத்து மாநிலத்தில் பெரிய படங்கள் கிடைப்பதால் அங்கே சென்றார்.

ஆனால், கோலிவுட்டில் தற்போது அவரது மார்க்கெட் அதள பாதாளத்துக்கு சென்றுள்ளதால், மீண்டும் அதனை பிடிக்க பெரிய ஹீரோக்களை மடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

தனது உடல் எடையையும் மாற்றி கச்சிதமாக்கி சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போஸ்ட் போட்டும் வருகிறார்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

கோலிவுட்டில் அறிமுகமான பிறகு அந்த நடிகைக்கு இளம் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை ஜோடி சேர்ந்தனர். கிடுகிடுவென லட்சங்களில் இருந்து கோடிகளுக்கு உயரிய மார்க்கெட் காரணமாக அம்மணி படு பிசியானார். என்னை அமெரிக்காவில் கூப்பிடுறாங்க, ஆப்பிரிகாவில் கூப்பிடுறாங்க என பில்டப் பண்ணி அவருக்கு இப்போ அதிகளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பக்கத்து மாநிலம்

பக்கத்து மாநிலம்

பக்கத்து மாநிலத்திலும் முன்னணி நடிகை அந்தஸ்த்து கிடைக்கிறது என்பதற்காக அங்கே பறந்த அந்த நடிகைக்கு அங்கேயும் பட வாய்ப்புகள் தற்போது குறைந்து விட்டன. சமீபத்தில் வெளியான சில படங்கள் படு தோல்வியை சந்தித்ததால் மீண்டும் கோடம்பாக்கம் பக்கம் சுற்றி வருகிறாராம் அந்த நடிகை.

அதள பாதாளத்தில்

அதள பாதாளத்தில்

தனது மார்க்கெட் சரிந்த நிலையில், கிடைக்கும் சில வாய்ப்புகளை பயன்படுத்தி சில படங்களில் ஒப்பந்தமாகி வரும் அந்த பிரபல நடிகை, சீக்கிரமே பழையபடி தனது மார்க்கெட்டை உயர்த்தும் முயற்சியில் தற்போது இறங்கி உள்ளாராம். அது தொடர்பாக சில பிரபல நடிகர்களுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

செகண்ட் கூட ஓகே

செகண்ட் கூட ஓகே

ஃபர்ஸ்ட்டாக இருந்து வந்த அந்த நடிகை செகண்ட் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தாலும் ஓகே என சிக்னல் கொடுத்துள்ளாராம். நடிகையின் நிலைமையை பார்த்து முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் இரண்டாவது நாயகி கதாபாத்திரத்தை உருவாக்க முடியுமா? என்றும் இயக்குநரிடம் கேட்டிருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாய்ப்பு கிடைக்குமா

வாய்ப்பு கிடைக்குமா

ஏற்கனவே அந்த முன்னணி நடிகர் படத்தில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், மீண்டும் அவருடன் இணைந்து டூயட் பாடும் வாய்ப்பு கிடைக்குமா? என ஏக்கத்தில் உள்ளாராம் அந்த நடிகை. அதே நேரத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனாலும், வேறு சில டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பை பிடிக்கவும் முயற்சித்து வருகிறார் அந்த பிரபல நடிகை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X