நீங்க சம்பாதிக்க நாங்க வரணுமா.. கடுப்பான பிரபலங்கள்.. நாளைக்குத் தான் என்ன ஆகுமோ? அதுவேற இருக்கே!
சென்னை: தடபுடலாக அனைத்து ஏற்பாடுகளையும் நம்பர் நடிகை செய்து வரும் நிலையில், சில முன்னணி பிரபலங்கள் அந்த சுப நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரவுடி இயக்குநரை பல காலமாக காத்திருக்க வைத்த நிலையில், கடைசியாக அதற்கு சம்மதம் தெரிவித்து சந்தோஷப்படுத்தி விட்டார் நம்பர் நடிகை.
சமீபத்தில் பெற்ற வெற்றியுடன் சத்தம் இல்லாமல் சரண்டர் ஆகி விடலாம் என க்ரீன் சிக்னல் கொடுக்க இயக்குநர் உடனடியாக அனைத்து ஏற்பாடுகளையும் முடித்து விட்டார்.

அங்கே அனுமதிக்கல
தாம்தூம் என ஏகப்பட்ட விஷயங்களை செய்ய நம்பர் நடிகை முடிவெடுத்த நிலையில், இந்த புனித இடத்தில் அதையெல்லாம் அனுமதிக்க முடியாது என அதிரடி காட்டிய நிலையில், அப்படியே பிளானை மாற்றி சொகுசு ஹோட்டலில் அந்த நிகழ்ச்சியை அரங்கேற்ற முடிவு செய்து அதற்கான வேலைகளை நடத்தி வருகின்றனர்.

கடும் கட்டுப்பாடு
சமீபத்தில் பாலிவுட்டில் நடந்த சில நிகழ்ச்சிகளை பார்த்து தானும் அதே போல செய்ய வேண்டும் என காப்பியடித்து நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் ஏற்பாடு செய்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மேலும், ரசிகர்களை மதிக்காமல் பணம் படைத்த பிரபலங்களை மட்டுமே அழைத்து இருக்கிறாராம் அந்த நம்பர் நடிகை.

இதிலும் பிசினஸ்
நடிப்பைத் தாண்டி பிசினஸிலும் அதிக கவனத்தை செலுத்தி வரும் அந்த நம்பர் நடிகை தனது சுப நிகழ்ச்சியையும் பிசினஸாகவே பார்த்துள்ளாராம். இதை வைத்து பாலிவுட் நடிகைகள் பணம் சம்பாதிப்பதை போலவே நாமும் செய்யலாம் என ரசிகர்களின் நிலையை மனதில் கொள்ளாமல் இப்படியொரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்.

வருவது கஷ்டம்
ஆரம்பத்தில் குடும்ப உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அளவுக்கே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நிலையில், தற்போது தாராளமாக பிரபலங்களையும் அழைத்து செய்தால் தான் பெரிய தொகைக்கு வியாபாரம் என நினைத்து அழைப்பு விடுத்துள்ளனர். அதன் காரணமாக பல பிரபலங்கள் வருவது சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர்.

அந்த பயம்
அதையும் தாண்டி மீண்டும் பரவத் தொடங்கி உள்ள அந்த நோய் காரணமாக உச்ச நடிகர், டாப் நடிகர் உள்ளிட்டவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றே தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. எது எப்படி இருந்தாலும், திட்டமிட்டபடி பிரம்மாண்டமாக அந்த சுப நிகழ்ச்சியை நடத்தி விடும் முயற்சியில் நம்பர் நடிகை தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











