கோலிவுட்டில் நெப்போடிசம் சும்மா கொடி கட்டி பறக்குதா?.. அந்த முடிவுக்கு காரணமே ஒரே குடும்பம் தானாம்?

By Staff

சென்னை: மாஸ் நடிகர், டாப் நடிகர், உச்ச நடிகர் மற்றும் இந்த ஆண்டு வெளியாகி ஃபிளாப் ஆன பாஸ் நடிகரின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் சோஷியல் மீடியாவில் சர்வதேச அளவில் ட்ரோல்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் பரவினாலும் சைலன்ட்டாக இருக்கும் கோலிவுட்டின் பல பெரும் புள்ளிகள் தற்போது பிரைட் நடிகர் படத்துக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பலரும் பொங்கி வருவது ஏன் என்கிற கேள்வி கோடம்பாக்கத்தில் எழுந்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் நெப்போடிசம் சர்ச்சையையும் தற்போது கிளப்பியிருப்பது தான் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகரை காப்பாற்றுகிறேன் என்கிற பெயரில் ஒட்டுமொத்த குடும்பமும் களத்தில் குதித்து பேச்சுரிமைக்கு தடை செய்து வருவதாக ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

gossip kollywood nepotism

தியேட்டர்களே வேண்டாம் என்றும் ஓடிடி தான் எதிர்காலம் என காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என வசனம் எல்லாம் பேசிவிட்டு ஒதுங்கியவருக்கு ஆதரவாக திடீரென தியேட்டர் ஓனர்கள் சப்போர்ட் செய்ய காரணமே நெப்போடிசம் தான் சினிமா பிரபலம் ஒருவர் நெத்தியடி அடித்திருப்பது அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

கோலிவுட்டில் நெப்போடிசம்: காலம் காலமாக சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாகவும் சினிமா துறையில் உச்சத்திலும் இருந்து வருவது இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. ஆனால், என்ன தான் நடிகர்களின் வாரிசுகளாக இருந்தாலும், ஒரு இடத்தை பிடிக்க பலருக்கும் பல ஆண்டுகள் ஆகும் என்றும் ஒவ்வொரு பிரபலங்களும் தங்கள் தனித் திறமையால் தான் முன்னேறி வருகின்றனர் என்பதால் கோலிவுட்டில் இதுவரை பெரிதாக நெப்போடிசம் சர்ச்சை எழவில்லை. ஆனால், தற்போது ஒரு நடிகரை சுற்றி பல தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் என கிளம்பி வந்து திடீரென ஆதரவு கொடுப்பதற்கு பின்னால் பெரிய விஷயம் ஓடிக்கொண்டு இருப்பதாக கூறுகின்றனர்.

சுதந்திரத்தை பறிக்கலாமா?: கமர்ஷியல் படங்களை எடுக்க வேண்டும் என ஃபிளாப் படத்தை கொடுத்த இயக்குநர் என்று தெரிந்தாலும் தேடிப் போய் வாய்ப்புக் கொடுத்துவிட்டு மீண்டும் அவர் ஃபிளாப் படத்தைக் கொடுத்த நிலையில், விமர்சகர்களின் சுதந்திரத்தை பிரைட் நடிகர் பறிக்கலாமா? என அந்த மூன்றெழுத்து பிரபலம் ஒருவரே பொங்கி பேசியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை எழுப்பியிருக்கிறது.

சீரியஸான பிரச்சனை: பிரைட் நடிகருக்கு ஆதரவாக சினிமாவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அவரது குடும்ப உறவுகளே திடீரென இந்த அடக்குமுறையை கையாண்டு வருவது சரியல்ல என்றும் இது காலத்துக்கும் அந்த நடிகருக்குத்தான் களங்கத்தை உருவாக்கும் இது ரொம்பவே சீரியஸ் பிரச்சனை என்றும் அந்த பிரபலம் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X