பந்தயம் அடிச்சே ஆகனும்.. இயக்குநருக்கு பிரஷர் போட்ட பெரிய கை.. எல்லாத்துக்கும் காரணம் அதுவா?

By Staff

சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் ஒருவர், பல ஆண்டுகளாக கனவு கண்டு வந்த பிரம்மாண்ட திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். முன்னணி நடிகர் ஒருவர் நடித்துள்ள அந்தப் படம் மீது ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், படத்தின் திரைக்கதையிலேயே பெரிய மாற்றம் செய்யும்படி ஒரு செல்வாக்கு மிக்க நபர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பொதுவாக தனது படங்களில் யாருடைய தலையீட்டையும் ஏற்றுக்கொள்ளாத இயக்குநர் என்ற பெயர் பெற்றவர் அவர். ஆனால் இந்த முறை நிலைமை வேறு மாதிரியாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் மற்றும் அரசியல் சாயல் கொண்ட சில வசனங்கள் குறித்து மீண்டும் யோசிக்க வேண்டும் என்று தயாரிப்புத் தரப்புக்கு நெருக்கமான ஒரு பெரிய கை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Top Director Under Pressure to Rewrite Big-Budget Film Fresh Kollywood-Tollywood Buzz Goes Viral

பந்தயம் அடிச்சே ஆகணுமாம்: அந்தப் படம் வெறும் வசூல் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. நாடு முழுவதும் பேசப்படும் படமாக மாற வேண்டும். குறிப்பாக சில மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. "இந்தப் படம் எல்லா தரப்பினரையும் திருப்திப்படுத்த வேண்டும். எந்த சர்ச்சையும் வரக்கூடாது" என்பதே அந்த பெரிய கையின் கணக்காம்.

அரசியல் கணக்கும் இருக்கா?: படம் வெளியாகும் காலகட்டமும், சில முக்கிய அரசியல் நிகழ்வுகளும் ஒன்றாக வருவதால், தேவையில்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று சிலர் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் ஏற்கனவே எடுத்து முடித்த சில காட்சிகளை கூட மீண்டும் படமாக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

இயக்குநர் மட்டும் கப்சிப்: இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட இயக்குநர் எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருப்பது மேலும் பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. "படம் ரிலீஸ் ஆகும் வரை எந்த சர்ச்சையும் வேண்டாம்" என்று நெருக்கமானவர்களே அறிவுரை கூறியிருப்பதாகவும் பேசப்படுகிறது.

உண்மை என்ன? இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் அனைத்தும் திரையுலக வட்டாரங்களில் பரவி வரும் கிசுகிசுக்களே தவிர, இதுகுறித்து படக்குழு அல்லது சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இருப்பினும், "பந்தயம் அடிச்சே ஆகணும்" என்ற மனநிலையில்தான் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X