ஆசை நாயகிக்கு சொகுசு பங்களா.. எந்த வீட்டுக்கு போகணும்? டிரைவருக்கே தெரிந்த டாப் ஹீரோ ரகசியம்!
சென்னை: 40 கோடியில் ஆசை நாயகிக்கு சொகுசு வீடு வாங்கிக் கொடுத்த முன்னணி ஹீரோ, தனது மகன், மகளின் படிப்புக்குக் கொடுத்த பணத்தையே கடனாக கொடுத்ததாக குறிப்பிட்டு இருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பல ரகசியத்தை உடைத்துள்ளார்.
முன்னணி நடிகராக ஜொலித்துக்கொண்டு இருக்கும் அந்த டாப் ஹீரோவின் குடும்ப வாழ்க்கை சிதற காரணமே குடி பழக்கம் தான். அந்த நடிகர் தினமும் போதையில் வீடு திரும்புவார், படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் ஏறியதும், கார் டிரைவர் எந்தவீட்டுக்கு போக வேண்டும் என கேட்பார். டாப் நடிகருக்கு எப்போதும் மனதிற்கு பிடித்த நடிகை அவர் என்பதால், அங்கு தான் செல்வார். அங்கே குடித்து குத்து அடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வருவார். இதுவே வாடிக்கையானதால், அந்த நடிகையுடனான தொடர்பை முறித்துக்கொள்ளுங்கள் என்று மனைவி பலமுறை எச்சரித்தும், டாப் ஹீரோ கேட்காததால்தான் கணவன் மனைவி உறவில் விரிசல் பெரிதானது.

பல கோடியில் வீடு: அதோடு அந்த டாப் நடிகர் தனது பெயரில் இருக்கும் சொத்துக்களை அந்த நடிகையின் பெருக்கு மாற்றி உள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அந்த நடிகைக்காக பல கோடியில் வீடும், பரிசுகள் என பலவற்றை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், சொந்த பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு கொடுத்த பணத்தை கடன் என குறிப்பிட்டுள்ளார். கணவரையே நம்பி இருந்த மனைவிக்கும் எந்தவிதமான பணத்தையும் செலவுக்கு கொடுத்ததே இல்லை. இதனால் தான் "இனி சேர்ந்து வாழ முடியாது" என்று அந்த டாப் நடிகரின் மனைவி வெளிநாடு சென்று தனது குழந்தைகளை படிக்க வைத்தார். இதற்கு மேல் சேர்ந்து வாழ முடியாது என்பதால் மனைவி விவாகரத்து மனு வரை தாக்கல் செய்தாராம்.
மனைவியை டார்ச்சர் செய்தார்: இதிலும் திருப்பம் என்னவென்றால், ஜீவனாம்சம் கொடுக்க மாட்டேன் என பிடிவாதம் பிடித்து, உன்னால் முடிந்ததை பார்த்துக்கோ என மனைவியை டார்ச்சர் செய்தார் அந்த டாப் நடிகர். அதே போல, அரசியல் லாபத்திற்காக சிம்மந்திக்காக விவாகரத்து மனுவை கசியவிட்டு அதிலும் நாடகமாடி இருக்கிறார். இதுபற்றி தீவிரமாக விசாரித்தால் அந்த நடிகரின் தந்திரம் தெரிந்துவிடும். அதோடு சமீபத்தில் கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது டாப் நடிகர் மனைவியிடம் நேரடியாக பேச நினைத்தார். ஆனால், டாப் நடிகரின் மனைவியோ இப்படிபட்டவனை நான் சந்திக்க விரும்பவில்லை என மறுத்துவிட்டார். இதனால், வேறு வழியே இல்லாமல் டாப் நடிகர் தனது மனைவியுடன் போனில் பேசினார் என அந்த பிரபலம் வெளிப்படையாக சொல்லி உள்ளார்.


Click it and Unblock the Notifications