இதென்னய்யா இப்படி சொல்றாய்ங்க... உச்ச ஹீரோ படம் அப்படி நஷ்டம், ஒல்லி நடிகர் படம் இப்படி நஷ்டமாம்ல!
சென்னை: உச்ச நடிகரில் படமும் ஒல்லி ஹீரோ படமும் வெவ்வேறு முறையில் நஷ்டத்தை சந்தித்ததாகச் சொல்கிறார்கள்.
உச்ச ஹீரோ நடிப்பில் வந்த மும்பை போலீஸ் அதிகாரி படம், கொஞ்சம் ஓவர் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.
இதில் ஹீரோவுக்கே பெரும் தொகை சென்றுவிட, பாக்கி மற்ற டெக்னீஷியன்கள், ஷூட்டிங் செலவு என்று பட்ஜெட் எங்கோ போய் நின்றதாம்.

அதிக ரேட்
இதனால் படத்தை ரூ.25 கோடி ரூபாய் குறைத்துதான் விற்றிருக்கிறார்களாம். அந்த ரேட்டே அதிகம் என்று கருதினார்கள் விநியோகஸ்தர்கள்.

சரிகட்டி விடலாம்
விடுமுறை நாட்கள் என்பதாலும் வேறு படங்கள் போட்டிக்கு இல்லை என்பதாலும் சரிகட்டிவிடலாம் என்று வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நினைத்த மாதிரியே லாபம் என்கிறார்கள். அதாவது தயாரிப்புக்கு நஷ்டம், வினியோகஸ்தர்களுக்கு லாபம்.

உல்டா மேட்டர்
இது அப்படியே உல்டாவாகி இருக்கிறது, ஒல்லி ஹீரோ படத்துக்கு. ஹீரோவின் முந்தைய படம், டாப் கியரில் ஹிட்டடித்ததால், இந்தப் படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் ஹேப்பியான தயாரிப்பாளர்.

அத்தனை பெயின்
ஆனால், ஆசையோடு வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பட்டாசு பட்ட காயம் மாதிரி அத்தனை பெயின் என்கிறார்கள். சொல்லிக்கொள்ளும்படி வசூல் இல்லையாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை.


Click it and Unblock the Notifications











