ஹீரோ மோதலை விடுங்க.. திடீரென தொடங்கிய ஹீரோயின் கிளாஷ்.. ஐடி விங்கெல்லாம் வச்சு நடக்குதாம்!

By Staff

சென்னை: சினிமாவில் சில நடிகர்களே ஒன்றாக இணைந்து ஒரே படத்தில் நடித்து வரும் மல்டி ஸ்டார் காலக்கட்டத்தில் சில நடிகைகள் ஒன்றாக இணைந்து நடிப்பதை போட்டி காரணமாக தவிர்த்து வரும் நிலையில், சமீப காலமாக அதை விட மோசமாக அடுத்த லெவலுக்கு இறங்கி ஒருவரை ஒருவர் கீழே தட்டி விடும் வேலைகளை செய்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

யூடியூபில் சில நடிகைகள் பற்றி அவதூறாக பேசவும், திருமண வதந்தி, கள்ளத்தொடர்பு வதந்திகளை பரப்பி விடும் வேலைகள் வரை சில நடிகைகளே கீழ்த்தரமாக இறங்கி செய்து வருவதாக திடுக்கிடும் தகவல்கள் கசிந்துள்ளன. சமீபத்தில், அந்த சின்ன நம்பர் நடிகை டென்ஷனாக காரணமும் அதுபோன்ற ஒரு மேட்டர் தான் என்கின்றனர்.

Top heroines IT wing war shocks kollywood

முதலிடத்தில் நடிகை: சில காலம் நடிகை எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில், நமக்கு வயதாகி விட்டது என அவரே ஒதுங்கி இருந்த நிலையில், அவரை மீண்டும் வெர்ஷன் 3.0வாக சில இயக்குநர்கள் மாற்றிய நிலையில், கிடைத்த வாய்ப்பை இனிமே விடக் கூடாது என்பதற்காக அதிரடியாக பெரிய நடிகர்கள் படங்களை கைப்பற்றி முதலிடத்தை பிடித்து விட்டார்.

நடிகைகளுக்கு பொறாமை: கோலிவுட்டில் சின்ன நம்பர் நடிகை ஒதுங்கி விட்டார் என நினைத்து அடுத்தடுத்து வந்த நடிகைகள் அவரது இடத்தை தட்டித்தூக்கிய நிலையில், மீண்டும் அந்த நடிகையின் விஸ்வரூபத்தால் சக நடிகைகள் பொறாமையில் இருப்பதாக கூறுகின்றனர். சில நடிகைகள் அந்த நடிகையை தாண்டி பாலிவுட் வரை பட்டையை கிளப்பி வரும் நிலையில், சில நடிகைகள் ரொம்பவே நடிகையின் ரீ என்ட்ரியால் அப்செட் ஆகி நடிகையை காலி பண்ணும் நோக்கில் செயல்பட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐடி விங் வச்சு ஆப்படிக்கிறாங்க: சில நடிகைகள் இதுக்கென தனியாக ஐடி விங் எல்லாம் வைத்து டாப்பில் இருக்கும் அந்த சின்ன நம்பர் நடிகையின் பெயரை காலி செய்ய சமீபத்தில் சில வேலைகள் நடந்ததை அறிந்து தான் அந்த நடிகை அப்படி டென்ஷனாகி எச்சரித்துள்ளதாக கூறுகின்றனர். அரசியல் மற்றும் பிரபல நடிகர்கள் மத்தியில் இதுபோன்ற ஐடி விங் சண்டை நடைபெற்று வந்த நிலையில், தற்போது நடிகைகளுக்குள்ளும் இந்த சண்டை ஆரம்பித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை அந்த விஷயம் நடிகைக்கு தெரியாத நிலையில், தான் அமைதியாக இருந்து வந்தாராம். இனிமேல் சின்ன நம்பர் நடிகையை எந்த நடிகையாவது சீண்டினால் பெயரை வெளியிட்டே எச்சரிக்கப் போவதாக தகவல்கள் கசிந்த நிலையில், நடிகையை சீண்டிய நடிகை சத்தமே இல்லாமல் அமைதியாகி உள்ளார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X