இளம் மாஸ் ஹீரோவுக்கு எகிறிய மவுசு.. டாப் ஹீரோயின்கள் எல்லாம் போன் பண்ணி சான்ஸ் கேட்கிறாங்களாம்?

By Staff

சென்னை: இடியே விழுந்தாலும் எந்தவொரு ரியாக்‌ஷனும் கொடுக்காமல் இளம் மாஸ் நடிகர் சமீபத்தில் நடித்த படம் சக்கைப் போடு போட்டு மாஸ் ஹீரோவின் வசூல் சாதனைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஏற்கனவே பல முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்த அந்த இளம் மாஸ் ஹீரோ சமீப காலமாக இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

நடிகரின் மார்க்கெட் திடீரென உச்சத்துக்கு சென்றதை அறிந்த பல முன்னணி நடிகைகள் அவருக்கு டைரக்டாவே போன் பண்ணி சான்ஸ் கேட்க ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

ஹீரோவான அறிமுகமான உடனே அடுத்தடுத்து வெற்றியை ருசி பார்த்த அந்த இளம் நடிகருக்கு தொடர்ந்து பல படங்கள் படு தோல்வியை சந்திக்க மிகவும் அப்செட் ஆனார். டிவியில் இருந்தே தனக்கு பழக்கமான அந்த இயக்குநரை நம்பி முழுமையாக தன்னை அர்பணிக்க தோல்விகளில் இருந்து மீண்டு பெரும் வெற்றி பெற்றுள்ளார் அந்த இளம் நடிகர்.

கழட்டி விட்ட நடிகைகள்

கழட்டி விட்ட நடிகைகள்

முன்னணி நடிகைகளுடன் இணைந்து அந்த ஹீரோ நடித்து வந்த நிலையில், சில படங்கள் சரியாக போகவில்லை என்றதும் புதிய படங்களில் அந்த நடிகருடன் இணைந்து நடிக்க சில முன்னணி நடிகைகள் தயங்கியதால் புதுமுக நடிகைகளை தனது படங்களில் புக் செய்து நடித்து வந்தார்.

எகிறிய மவுசு

எகிறிய மவுசு

இளம் மாஸ் ஹீரோவின் சமீபத்திய ரிலீஸ் படம் திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்துள்ளது. சிக்கலான நேரத்தில் ரிலீஸ் ஆனாலும், நடிகரின் நடிப்பு மற்றும் இயக்குநரின் படைப்பு இரண்டுமே வொர்க்கவுட் ஆகி அந்த படம் வெற்றிக் கனியை பறிக்க ஹீரோவின் மவுசு உச்சத்துக்கு எகிறி உள்ளது.

போனில் அழைப்பு

போனில் அழைப்பு

இந்நிலையில், ஹீரோவின் சமீபத்திய படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில், சில டாப் ஹீரோயின்களே அவருக்கு தனியாக போன் போட்டு அடுத்த படங்களில் வாய்ப்பு கேட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே அவருடன் ஜோடி போட்டு நடித்த சில நடிகைகள் மீண்டும் படம் பண்ணலாம். இப்போ கால்ஷீட் இருக்கு என்றும் ஓப்பன் டீல் பேசி வருகின்றனராம்.

லைன் அப்

லைன் அப்

கோலிவுட் மற்றும் டோலிவுட் என அந்த இளம் மாஸ் ஹீரோவுக்கு மார்க்கெட் விரிவடைந்துள்ள நிலையில், பக்கத்து மாநில நடிகைகளும் அவருக்கு வலை வீசி வருகின்றனராம். அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்க உள்ள அந்த இளம் மாஸ் நடிகர் இரண்டு முன்னணி ஹீரோயின்களை ஜோடியாக போட்டு நடிக்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X