படம் ரிலீஸ் அன்னைக்கே அசிங்கப்பட்ட ஹீரோ.. சக நடிகரின் தோழி கொடுத்த பல்பு.. கண்டித்த நடிகர்
சென்னை: கோலிவுட்டில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் அந்த நடிகர் இப்போது ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது படம். இதுவரை படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துவருகின்றன. ஆனால் அதே படத்தில் இன்னொரு நடிகரும் நடித்திருந்தார். அந்த நடிகரின் தோழி சொன்ன வார்த்தைகள் ஹீரோ நடிகருக்கு சரியான அசிங்கமாகிவிட்டதாம். உடனே சம்பந்தப்பட்டவருக்கு ஃபோனையும் செய்துவிட்டாராம்.
சினிமாவில் ஏராளமான கஷ்டங்களை சந்தித்து மேலே வந்திருப்பவர் இந்த நடிகர். ரசிகர்களால் தமாஸ் நடிகர் என்றும் அவ்வப்போது அழைக்கப்படுவார். அவர் இன்ட்ரோ ஆன சமயத்தில் எல்லாம் பத்து படங்களைக்கூட தாண்டமாட்டார் என்றுதான் பலரும் ஆரூடம் கூறினார்கள். அதையெல்லாம் காதுகளில் போட்டுக்கொள்ளாத அவர் தொடர்ந்து திறமையை வளர்ப்பதும், அதை படங்களில் நடிக்கும்போது காண்பிப்பதாகவும் இருந்தார்.
அசுர வளர்ச்சி: அதன் காரணமாக தமாஸ் நடிகரின் வளர்ச்சி சீராக இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த நான்கு எழுத்து படம் நடிகரின் கரியரை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. அப்படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு நெருப்பான படத்தில் நடித்தார். இதனை தேசிய விருது வென்ற இயக்குநர் இயக்கியிருக்கிறார். அவருடன் இன்னும் இரண்டு ஹீரோ நடிகர்களும் சேர்ந்து நடித்தார்கள்.

இன்று வெளியான படம்: மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்த அந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. எப்படியும் தனது கரியரில் இதுவும் முக்கியமான படமாக அமையும் என்று தமாஸ் நடிகர் நம்பினார். அவரது நம்பிக்கை வீண் போகாத அளவுக்குத்தான் ரிசல்ட்டும் அமைந்தது. இவரது நடிப்பையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதேசமயம் படத்தில் நடித்த இன்னொரு வெற்றி நடிகரின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
குவியும் பாராட்டு: தமாஸ் நடிகரின் நடிப்பைவிடவும் ஒருபடி மேலே அந்த நடிகரின் நடிப்பு இருந்ததாக பேச்சுக்கள் அதிகரிக்க ஆர்மபித்திருக்கின்றன. அவருக்கு பாராட்டுக்களும் குவிய ஆரம்பித்துவிட்டன. இப்படிப்பட்ட சூழலில் அந்த நடிகரின் தோழியும் படம் பார்த்தார். படம் பார்த்தவர் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல், 'இந்த நடிகரால்தான் படம் ஓடும்' என சொல்லிவிட; தமாஸ் நடிகருக்கு பல்பு கொடுத்தது மாதிரி ஆகிவிட்டதாம்.
கண்டித்த நடிகர்?: இதை பார்த்த தமாஸ் நடிகர் இன்னொரு நடிகருக்கு ஃபோனை போட்டு என்ன இப்படியெல்லாம் பேசிட்டாங்க என புலம்பினாராம். அதுமட்டுமின்றி தன்னைவிட அவர் பெயர் எடுத்துவிடுவாரோ என தனக்கு நெருக்கமானவர்களிடமும் சொல்கிறாராம். தமாஸ் நடிகரிடமிருந்து வந்த ஃபோனை அடுத்து தனது தோழியிடம் எதற்காக இப்படி பேசினாய். இனிமேல் இப்படியெல்லாம் பேசாதே ஸ்ட்ரிக்ட்டாக வெற்றி நடிகர் சொல்லிவிட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











