இதுதான் கடைசி.. நீயும் வா.. விழாவுக்கு அழைப்பு விடுத்த மாஸ் நடிகர்.. மனைவியின் ரியாக்ஷன் இதுதானா?
சென்னை: தமிழ்நாட்டின் மாஸ் நடிகர் என்று பெயர் எடுத்த அவர் சினிமாவிலிருந்து விரைவில் ஒதுங்கவிருக்கிறார். அவர் நடித்திருக்கும் படம் தொடர்பான விழா ஒன்று வெளிநாட்டில் நடக்கவிருக்கிறது. ரசிகர்களும், செலிபிரிட்டிகளும் அங்கு படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். கண்டிப்பாக அந்த நாடு குலுங்கப்போகிறது என பலரும் சொல்கிறார்கள். இந்நிலையில் புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் கிளம்பியிருக்கிறது.
கோலிவுட்டில் இந்த நடிகர் நுழைந்தபோது பலரும் இவரது உருவத்தை வைத்து; விரைவில் இவரெல்லாம் காணாமல் போய்விடுவார் என்று தப்பு கணக்கு போட்டிருந்தார்கள். ஆனால் அந்த நடிகரின் வளர்ச்சி வானளவு உயர்ந்துவிட்டது. விரைவில் ஃபீல்ட் அவுட் ஆகிவிடுவார் என கணித்தவர்கள் எல்லாம் இப்போது அந்த நடிகரிடம் நெருங்கி பழகுவதற்கு வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர் சரசரவென்று மேலே போய்விட்டார்.
புதிய பயணம்: அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் அசால்ட்டாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவருகின்றன. இதனால் உச்ச நடிகரின் ஒருவரின் இடத்தையே இவர் பிடிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. சினிமா மூலம் கிடைத்த ரசிகர்களிடம் கிடைத்த செல்வாக்கை பயன்படுத்தி இப்போது புதிய பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். நிச்சயம இந்த பயணத்திலும் தனது தடத்தை பதிக்க வேண்டும் என்று தீவிரமாக உழைத்துவருகிறார்.

இதுதான் கடைசி: புதிய பயணத்தில் முழு உழைப்பையும் கவனத்தையும் அதிகம் போட வேண்டுமென்பதால் தன்னை வளர்த்த துறையிலிருந்து ஒதுங்கவும் இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிய மன கஷ்டத்தை கொடுத்தாலும்; வேறு வழியே இல்லாததால் இந்தப் படத்தின் ரிலீஸை திருவிழா போல் கொண்டாடவிருக்கிறார்கள். படம் சம்பந்தப்பட்ட விழா ஒன்றும் வெளிநாட்டில் கோலாகலமாக நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
படையெடுக்கும் பிரபலங்கள்: அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ரசிகர்கள், செலிபிரிட்டிகள் எல்லாம் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நடிகரும் தனது உறவினர்கள் சகிதமாக பறந்திருக்கிறார். விழாவில் அவர் என்ன பேசப்போகிறார்; அதனால் என்னென்ன விவாதங்கள் தமிழ்நாட்டில் எழ போகின்றன என்பதுதான் இப்போதைக்கு பலரிடம் எழுந்திருக்கும் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
மனைவியிடம் சொன்ன நடிகர்: இது ஒருபக்கம் இருக்க இந்த விழாவில் எத்தனையோ பேர் கலந்துகொண்டாலும்; நடிகரின் மனைவி மீதுதான் பலரது கவனமும் இருக்கிறது. ஏற்கனவே அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் பிரச்னை என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விழா குறித்து புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் கிளம்பியிருக்கிறது. அதாவது இதுதான் கடைசி விழா என்பதால் நீயும் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாரம் நடிகர். ஆனால் நடிகர் மீது ஏற்கனவே மனஸ்தாபத்தில் இருக்கும் மனைவியோ; என்னால் வர முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். விழாவில் கலந்துகொள்ளும்படி சக குடும்பத்தினர் சொல்லியும் அம்மணி கேட்கவில்லையாம். அதேபோல் மகன், மகளிடமும் நீங்கள் கலந்துகொள்ளக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டுவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











