நடிகரை நம்பி 40ஐக் கடந்த முதிர் கன்னி நடிகை.. உல்லாச வாழ்க்கையில் நடிகர்.. வாழ்க்கை போச்சுனு புலம்பல்

By Staff

சென்னை: சினிமா உலகம் என்பது தூரத்துப் பச்சை மட்டுமல்ல, சில நேரங்களில் அது மாயாஜாலக் கண்ணாடியும் கூட. இங்கு பளபளக்கும் வெளிச்சத்திற்குப் பின்னால் பல ஏமாற்றங்களும், கண்ணீர்க் கதைகளும் மறைந்து கிடக்கின்றன. அப்படித்தான், காதலை நம்பிக் காலத்தைக் கடத்திய ஒரு முன்னணி நடிகையின் தற்போதைய நிலை தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பெரும் பேச்சாகக் கிளம்பியுள்ளது.

அறிமுகமான புதிதிலேயே தனது காந்தக் கண்களாலும், வசீகரமான தோற்றத்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் அந்த அசாத்திய அழகு நடிகை. உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து, முன்னணி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். திரையில் கிளாமர், எதார்த்தம் என இரண்டிலும் கலக்கிய இவருக்குத் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பெரிய பலவீனம் இருந்தது. அதுதான் அந்தப் பாசக்கார நடிகர் மீதான காதல்.

ஒரு முக்கியப் படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. நடிகரோ தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, "நானே உனக்கு நல்ல பட வாய்ப்புகளைத் தருகிறேன், நாம் விரைவில் இணைந்து வாழலாம்" எனப் பல வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். நடிகையும் அந்தப் பாச வலையில் விழுந்து, நடிகரை மட்டுமே தனது உலகம் என நம்பத் தொடங்கினார். படப்பிடிப்புத் தளங்களைத் தாண்டி, பல சொகுசுப் பயணங்கள், உல்லாசக் கொண்டாட்டங்கள் என இவர்களது காதல் வாழ்க்கை நகர்ந்தது.

Top South Actress Crosses 40 Waiting for Actor s Marriage Promise Kollywood Buzz Intensifies

முதிர் கன்னியாக தவிக்கும் நடிகை: நாட்கள் வருடங்களாகின. நடிகைக்கு முப்பது கடந்து, தற்போது நாற்பது வயதையும் தொட்டுவிட்டது. ஆனால், நடிகர் கொடுத்த திருமண வாக்குறுதி மட்டும் இன்னும் நிறைவேறவில்லை. இடையில், நடிகர் தனது வழக்கமான பாணியில் புதிய பட வாய்ப்புகள், புதிய வரவுகள் எனத் தனது உல்லாச வாழ்க்கையை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

கவலை: இதை தாமதமாக உணர்ந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகளும் குறைந்து, திருமண வாழ்க்கையும் அமையாமல் ஏமாற்றத்தில் இருப்பதாகத் திரையுலகினர் கிசுகிசுக்கிறார்கள். காதலை நம்பித் தனது பொன்னான காலத்தை இழந்த அந்தத் தாரகை, திரையுலகில் ஒரு முதிர் கன்னியாகவே எஞ்சிவிட்டாரே என அவருக்கு நெருக்கமானவர்கள் தங்களுக்குள் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் அக்கட தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X