5 ஸ்டார் ஹோட்டலில் நாய்க்கும் ரூம்.. நடிகையின் ஓவர் அலப்பறை.. பில் எவ்வளவு தெரியுமா?
சென்னை: தென்னிந்திய மொழி திரைத்துறையில் கடந்த பல வருடங்களாக டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கும் அம்மணிக்கு நாய் என்றால் கொள்ளை பிரியம். தான் எங்கே சென்றாலும் மறக்காமல் நாயையும் அழைத்து செல்லும் வழக்கம் உடைய அவர்; சமீபத்தில் அந்த நாயை வைத்து ஓவர் அலப்பறையை செய்துவிட்டாராம்.
தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் அவர். கடந்த பல வருடங்களாக டாப் 10 இடத்துக்குள் இருக்கிறார். எந்த கேரக்டரை கொடுத்தாலும் அதை அசால்ட்டாக செய்து அப்ளாஸ் வாங்கக்கூடிய அவர்; கோடி கணக்கில் சம்பளம் வாங்குகிறார். மேலும் பல விருதுகளையும் வென்றிருக்கிறார். அவருக்கென்று லட்சக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கிளான நடிகை: நடிகைக்கு சில காதல் தோல்விகள் ஏற்பட்டன. இதனால் ரிலேஷன்ஷிப் மீது பெரிய பயத்தில் இருக்கிறார்; என்றும் அதனால்தான் இன்னமும் சிங்கிளாக வலம் வருகிறார் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் தனக்கு பயம் எல்லாம் இல்லை; தனக்கு பிடித்தபடியும், தனக்கு நம்பிக்கை உருவாக்கும்படியும் ஒருவர் வந்தால் கண்டிப்பாக ரிலேஷன்ஷிப்பை அவருடன் ஏற்படுத்திக்கொள்வேன் என்பதுதான் அம்மணியின் நிலைப்பாடு. ஆனால் இதுவரை அப்படி யாரும் கிடைக்கவில்லை.
வருத்தத்தில் குடும்பம்: அதேசமயம் நடிகை இப்படியே எத்தனை வருடங்கள்தான் இருக்கப்போகிறாரோ என்று உச்சபட்ச கவலையில் இருக்கிறார்கள் குடும்பத்தினர். எப்படியாவது அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என இல்லாத முயற்சிகளை எல்லாம் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் நடிகையோ அவர்களுக்கு ஒவ்வொருமுறையும் டிமிக்கி மேல் டிமிக்கி கொடுத்துவருகிறார். அது குடும்பத்துக்கு பெரிய சிக்கலாக இருக்கிறதாம்.

நாயே துணை: நடிகையை பொறுத்தவரை தான் சிங்கிளாக இல்லை என்பது நிலைப்பாடு. அதாவது பிரியமாக வளர்த்துக்கொண்டிருக்கும் நாய் தனக்கு துணையாக இருக்கிறது. அதனை நான் ரொம்பவே விரும்புகிறேன் என தோழிகளிடம் கூறிவருகிறார். அந்த நாயை தனது வீட்டில் ஒருவராகவே வளர்த்துவருகிறார். பல லட்சம் ரூபாய் மட்டும் அந்த நாயை பராமரிக்க செலவு செய்துவருகிறாராம். பார்த்து பார்த்து கவனித்துக்கொள்கிறாராம்.
5 ஸ்டார் ஹோட்டலில் ரூம்: இந்நிலையில் நடிகையின் அலப்பறை பற்றி தெரியவந்திருக்கிறது. அதாவது எங்கே சென்றாலும் நாயை அழைத்து செல்லும் வழக்கம் உடைய அவர்; சமீபத்தில் ஒரு ஷூட்டிங்கில் கலந்துகொண்டாராம். வெளி மாநிலத்தில் நடந்த ஷூட்டிங்கிற்கு நாயையும் அழைத்து சென்றிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளிடம் எனக்கு ரூம் போடும் ஹோட்டலில்தான் நாய்க்கும் ரூம் என சொல்ல; வேறு வழியில்லாமல் அப்படியே செய்தாராம் தயாரிப்பாளர். அதற்கான செலவு தொகை மட்டும் ஒரு நாளை 25,000 ரூபாயாம். மொத்தம் ஏழு நாட்கள் நாயும், நடிகையும் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தார்களாம்.


Click it and Unblock the Notifications











