டல்லடிக்கும் வாய்ப்புகள்.. சீனியர் நடிகர்களுக்கு மட்டும் விருந்து வைக்கும் டாப் ஹீரோயின்.. புது கலாசாரம்
சென்னை: கோலிவுட்டின் சீனியர் நம்பர் நடிகைகளில் ஒருவர் இந்த அம்மணி. கடந்த இரண்டு தசாப்தங்களாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்தை மிஸ் செய்யாமல் வைத்திருக்கிறார். ஆனால் சமீபமாக அந்த இடத்துக்கு சிக்கல் வந்துவிடும் சிக்னல்கள் தெரிகின்றன. இதன் காரணமாக தனது ரூட்டை மாற்றி சீனியர் நடிகர்களுக்கு விருந்து வைக்கும் கலாசாரத்தை உருவாக்கியிருக்கிறாராம்.
சீனியர் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடித்து தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் அந்த நம்பர் நடிகை. முதல் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக அடுத்தடுத்து வரிசையாக வாய்ப்புகள் வர தொடங்கின. வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் இளம் ஹீரோக்கள், சீனியர் ஹீரோக்கள் என வயது பாகுபாடு இல்லாமல் ஜோடி போட்டு நடித்தார். பலன் அதற்கு கை மேல் கிடைத்தது.
தென்னிந்திய மொழிகளில் டாப்: தமிழில் மட்டும் அப்படி கலக்கிவந்த அவருக்கு மற்ற மொழி திரைத்துறை கதவுகளும் திறக்கவே செய்தன. இங்கே எப்படி சீனியர், ஜூனியர் என ஏற்றத்தாழ்வு இல்லாமல் நடித்தாரோ அதே ஃபார்முலாவை மற்ற மொழிகளிலும் அப்ளை செய்து தனது கொடியை உயர பறக்கவிட்டார். எனவே குறுகிய காலத்திலேயே தென்னிந்திய ஹீரோயின்களில் முதல் இடம் என்ற அரியணையில் ஏறினார்.

மன உறுதி கொண்ட நடிகை: இதற்கிடையே ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்திருந்தார் அம்மணி. அந்தத் தோல்விகளில் அவரைத்தான் பலரும் விமர்சனம் செய்தார்கள். முக்கியமாக தங்கள் இஷ்டத்துக்கு அந்த நடிகைக்கு என்னவெல்லாமோ பட்டங்களை எல்லாம் சூட்டினார்கள். அவர் மாதிரி வேறு யாராவது இந்த அளவுக்கு விமர்சனங்களை சந்தித்திருந்தால் கண்டிப்பாக மன உளைச்சலில் காணாமல் போயே இருப்பார்கள்.
செட்டிலான நடிகை: நடிகைக்கு இயல்பிலேயே மன உறுதி கொஞ்சம் அதிகம். அதன் காரணமாக அவை அனைத்தையும் அசால்ட்டாக கடந்து வந்தார். அதுமட்டுமின்றி திரைத்துறையிலேயே ஒருவரை காதலித்து திருமணம் செய்து செட்டிலும் ஆகிவிட்டார். தற்போது குடும்பம், குழந்தைகள் என நிம்மதியாக இருந்தாலும் நடிக்க்ம் ஆசை விடவில்லை. ஆனால் அம்மணிக்கோ முன்னர் போல் வாய்ப்புகள் எதுவும் அதிகம் வரவில்லை.
புது கலாசாரம்: ஜூனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக போட்டால் ஒத்துவராது என்பதால்; இளம் கதாநாயகர்களின் இயக்குநர்கள் இவரை எட்டிக்கூட பார்ப்பதில்லையாம். அதேபோல் சீனியர் ஹீரோக்களும் இளம் ஹீரோயின்களைத்தான் தேடுவதால் அவர்கள் காற்றும் அடிக்காமல் இருந்ததாம். இப்படியே விட்டால் மூட்டை முடிச்சை கட்ட வேண்டியதுதான் என்பதை தெரிந்துகொண்டு சுதாரித்து புது கலாசாரத்தை அறிமுகம் செய்திருக்கிறாராம்.
அதாவது இளம் ஹீரோக்களின் பட சான்ஸ்கள் வரவில்லை. சீனியர் ஹீரோக்களின் படங்களையாவது கைப்பற்ற வேண்டுமென்றால் அவர்களது தயவு கண்டிப்பாக வேண்டும் என்பதை புரிந்து; 'தனக்கு சான்ஸ் கொடுத்தால் இதுவரை இல்லாத அளவுக்கு விருந்து வைக்கிறேன்' என்று தனது மேனேஜர் மூலம் தூது சொல்கிறாராம். முதலில் இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆகவில்லையாம். ஆனால் பக்கத்து மாநிலத்தை சேர்ந்த ஒரு சீனியர் நடிகர் அந்த விருந்தை சாப்பிட்டுவிட்டு நடிகையை தனது படத்தில் கமிட் செய்துவிட்டாராம். இன்னும் சில சீனியர்கள் நடிகையின் விருந்தில் கலந்துகொள்ள முடிவெடுத்துவிட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











