ஆண் வேண்டாம் பெண்கள்தான் வேண்டும்.. தன்பாலின ஈர்ப்பாளராக மாறிய டாப் ஹீரோயின்.. சக நடிகையுடன் கச்சேரி
சென்னை: தென்னிந்திய சினிமாவில் கடந்த பல வருடங்களாக முத்திரை பதித்து ஜொலித்துவருபவர் அந்த நடிகை. இடையில் சில காதல் தோல்விகளை சந்தித்த அவர் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதுமட்டுமின்றி இனி தனது வாழ்க்கையில் ஆண்களுக்கு நோ பெர்மிஷன் என்ற கொள்கையில் இருக்கும் அவர்; தன் பாலின ஈர்ப்பாளராக மாறி சக நடிகையுடன் அட்டாச் ஆக ஆரம்பித்துவிட்டாராம்.
நடிகைகள் சினிமா துறையில் இரண்டு வருடங்கள் தாக்குப்பிடிப்பதே லேசுப்பட்ட காரியம் இல்லை. ஆனால் இந்த அம்மணியோ கடந்த பல வருடங்களாக லைம் லைட்டிலேயே இருக்கிறார். தென்னிந்திய சினிமாவை கலக்கு கலக்கிய அவருக்கு முன்னர் போல் வாய்ப்புகள் கொட்டி கிடைக்கவில்லை என்றாலும் இப்போதும் நடிக்கத்தான் செய்துகொண்டிருக்கிறார். தனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதுவாகவே மாறி மெர்சல் செய்வதில் வல்லவர்.
காதல் தோல்விகள்: சினிமாவுக்கு வந்த புதிதில் முதலில் ஒரு காதல் செய்தார். ஆனால் அது பாதியில் முடிந்தது. தொடர்ந்து சில காதல்களை செய்தாலும் அந்தக் காதல் எல்லாம் ஏமாற்றத்தையும், வலியையுமே கொடுத்தன. ஆனாலும் காதல் மீது இருந்த ஆர்வம் அம்மணிக்கு குறையவில்லை. இதனால் சில வருடங்களுக்கு முன்புகூட ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அதுவும் பாதியில் முடிந்துபோக இனி காதலுக்கே இடமில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
திருமணமும் நோ: அதுமட்டுமின்றி திருமணமும் செய்துகொள்ளப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிடு என்று அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் எவ்வளவோ சொல்லிவிட்டார்களாம். நடிகையோ அதெல்லாம் வேண்டாம், எனக்கு ஆர்வம் இல்லை என்று மறுத்துவிட்டாராம். ஆனால் திருமணம் வேண்டாம் என்று உறுதியாக நிற்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறதாம்.

என்ன காரணம்: அதாவது ஆரம்பத்திலிருந்தே அம்மணி இரு பாலின ஈர்ப்பாளராக இருந்திருக்கிறார். இந்த விஷயமெல்லாம் அம்மணி காதலித்த ஆண்களுக்கு தாமதமாகத்தான் தெரியவந்ததாம். அதன் காரணமாகத்தான் வரிசையாக அவரிடமிருந்து காதலர்கள் விலக ஆரம்பித்துவிட்டார்களாம். இதனால் இனி ஆண்களை காதலித்தால்தானே பிரச்னை என்று முடிவு செய்து பெண்கள் பக்கம் கவனத்தை திருப்பினாராம் நடிகை.
சக நடிகையுடன் கச்சேரி: இருப்பினும் தன்னை போன்றே ஒரு பெண்ணை கண்டுபிடிப்பதில் கொஞ்சம் சிக்கல் இருந்ததாம். இருந்தாலும் ஒருவழியாக திரைத்துறையிலேயே இன்னொரு நடிகையும் தன்னை போன்று இருப்பதை தெரிந்துகொண்டு; அவரிடம் அப்ரோச் செய்திருக்கிறார். டாப் ஹீரோயின் வளைத்த பெண் வளர்ந்துவரும் நடிகையாக இருந்துவருகிறார். அவரும் டாப் ஹீரோயினின் அப்ரோச்சுக்கு சம்மதம் சொன்னதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் தங்க ஆரம்பித்து கணவன் - மனைவியாகவே வாழ ஆரம்பித்துவிட்டார்களாம். இந்த விஷயத்தை தெரிந்து இரண்டு பேரையும் அவர்களது வீட்டார்களும் ஒதுக்கி வைத்துவிட்டார்களாம். இதுமட்டுமின்றி தன்னுடன் இருக்கும் சக நடிகை தவிர்த்து இன்னும் சில பெண்களுடனும் உறவில் இருக்கும் டாப் ஹீரோயின் எல்லை மீறி கச்சேரி நடத்திக்கொண்டிருக்கிறாராம். விரைவில் இந்த லீலைகள் வெளியே தெரியும் என்று கிசுகிசுக்கிறார்கள் திரைத்துறையினர்.


Click it and Unblock the Notifications











