பல வருச கனவு.. பெரிய பார்ட்டிக்கு தயாரான பிரைட் நடிகர்.. தீர்க்கமா ஒரு முடிவு எடுத்துட்டாராம்

By Staff

சென்னை: இந்த நடிகர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர், தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் சரியனா மார்க்கெட் வைத்துள்ள நடிகர் என்று நாம் இவரைக் கூறலாம். அந்த அளவுக்கு நடிகருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஆனால் இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இவரது படம் பெரிய அளவில் ஹிட் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்படி இருக்கையில் நடிகரின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் மாஸ் ஹிட் அடித்துள்ளதால் நடிகர் உற்சாக வெள்ளத்தில் இருக்கிறாராம்.

நடிகர் அடிப்படையில் திரை பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரது நடிப்பில் பல படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. மாஸ், கிளாஸ் என இவர் கலந்து கட்டி பல வெற்றிகளைக் கொடுத்துள்ளார். கொரானாவில் இருந்து கூட மொத்த உலகமும் மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டு இருப்பதை கண் கூட பார்க்க முடிந்தது, ஆனால் நடிகருக்கு தொடர்ந்து பல படங்கள் தோல்வியோ தோல்விதான்,. எங்கு திரும்பினாலும் தோல்வி, யாருடன் இணைந்தாலும் தோல்வி.

Top South Star Plans Grand Success Party After Massive Comeback Hit

தோல்வியோ தோல்வி: சம்பளத்தைக் குறைத்தாலும் தோல்வி, சம்பளமே முறையாக வாங்கவில்லை என்றாலும் தோல்வி. இப்படி இருக்கையில் நடிகருக்கு கிடைத்த இரண்டு வெற்றிகளும் ஓடிடி தளங்களில் வெளியான படங்கள் தான். அதுவும் அவருக்கு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து விருதுகளை எல்லாம் வாங்கிக் கொடுத்தது. இப்படி இருக்கும்போது நடிகரின் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வந்த படத்திற்கு கொடுத்த பில்டப்புக்கு இப்போது வரை அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

பெரிய கம் பேக்: இப்படி இருக்கையில் நடிகரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், தென்னிந்திய அளவில் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர், இயக்குநர் என மொத்த குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் நடிகரோ உற்சாக வெள்ளத்தில் ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறாராம். அதுவும் நடிகர் தனது மொத்த குழுவினருக்கும் நன்றி தெரிவிக்க தனது சொந்த செலவில் பார்ட்டி வைக்க பிளான் போட்டு வருகிறாராம். மேலும் இயக்குநருக்கு போன் போட்டு தனது ஆனந்தத்தை வெளிகாட்டி உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்த இயக்குநருடன் மீண்டும் ஒரு படம் பண்ணவும் முடிவு எடுத்துவிட்டாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X