உன் கணவர் படத்தால் என் படத்துக்கு பெரிய அடி.. நடிகையிடம் அழுது புலம்பிய மச்சான் நடிகர்?

By Staff

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அந்த நடிகர். அவருக்கென்று லட்சக்கணக்கானோர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவரது மனைவியின் தம்பியும் ஒரு நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் பெரிய வெற்றி எதுவும் கிடைக்காமல் திண்டாடிவருகிறார். இந்நிலையில் அவர் பற்றி புதிய கிசுகிசு ஒன்று கோலிவுட்டில் வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது.

கோலிவுட்டில் அவருக்கென்று தனி ரசிகர் படையே இருக்கிறது. அவர் கண் அசைத்தால் போதும் அவருக்கென்று என்ன வேண்டுமானாலும் செய்ய பலர் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர் அதையெல்லாம் செய்வதில்லை. தான் உண்டு, தனது தொழில் உண்டு, குடும்பம் உண்டு என்று இருக்கிறார். அவரது இந்த குணமே அவருக்கென்று பலரை ரசிகர்களாக மாற்றிவிட்டது என்று சொல்லலாம். இப்போதும் பிஸியாக நடித்துவரும் அவர் தனது குடும்பத்தை கண்கள் போல் பார்த்துக்கொள்பவர்.

நல்லதொரு குடும்பம்: நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். பலருக்கும் அவர்கள் ஆதர்ச தம்பதிகளாக விளங்கிக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம் இருக்க அந்த நடிகையின் தம்பியும் சினிமாவில் கடந்த பல வருடங்களாக நடித்துவருகிறார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி எதுவும் அவருக்கு கிடைத்தபாடில்லை.

Top Star Refuses to Help Brother-in-Law s Film Kollywood Gossip Sparks Buzz

ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்ட நடிகர்: தனக்கு வெற்றி கிடைக்காததால் தனது மாமாவின் படத்தில் ஏதாவது ரோல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என தனது அக்கா மூலம் தூதும் அனுப்பினாராம். ஆனால் உச்ச நடிகரோ அதெல்லாம் கிடையாத்; நான் எப்படி தன்னந்தனியாக கையை ஊன்றி எழுந்தேனோ அதேபோல் உன் தம்பியையும் எழ சொல் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். இதனால் மச்சான் நடிகருக்கு உச்சபட்ச ஏமாற்றம் என்பது தனிக்கதை.

படத்துக்கு விழுந்த அடி: சூழல் இப்படி இருக்க சோலோ ஹீரோவாக நடித்துவரும் மச்சான் நடிகர் சமீபத்தில் ஒரு படத்தில் நடித்தார். தொடர்ந்து அந்தப் படத்தின் இயக்குநருடன் மட்டுமே கூட்டணி வைக்கும் அவர்; இந்த முறை நிறைய சிரமங்களை சந்தித்துவிட்டாராம். படத்துக்காக ஏகப்பட்ட கஷ்டங்களை சுமந்து நடித்திருக்கிறார். ஆனால் படம் வந்த தடயமே தெரியவில்லை. இதனால் இயக்குநரும், நடிகரும் வேதனையின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்களாம்.

நடிகையிடம் புலம்பிய நடிகர்?: இந்நிலையில் கோலிவுட்டில் புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது, தனது மாமாவின் படம் வந்ததால்தான் தன்னுடைய படத்துக்கு கூட்டம் வரவில்லை என்று நினைக்கும் நடிகர்; தனது அக்காவிடம், 'மாமாட்ட நீ கொஞ்சம் சொல்ல வேண்டியதுதானே. அவர் மட்டும் தலையிட்டிருந்தால் அவருடைய படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸை தள்ளி வைத்திருப்பார்கள். எனது படமும் தப்பித்து இருக்கும். அவர் படத்தில்தான் சான்ஸ் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார். தனியாக நான் வெல்வதற்கு இது மாதிரியான சின்ன சின்ன உதவிகளை செய்திருக்கலாமே' என அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X